2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் கதாநாயகிகளாக இருப்பவர்கள் சமீப காலங்களில் அதிகமாக சுற்றுலா செல்லும் ஒரு இடமாக மாலத்தீவு உள்ளது. அங்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு அந்த நாட்டு அரசும், அங்குள்ள ரிசார்ட்டுகளும் ஸ்பான்சர் செய்வதாக ஒரு தகவல் உண்டு.
மாலத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்கள் வரிசையில் தற்போது பூஜாவும் இணைந்துள்ளார். நேற்று தன்னுடைய சுற்றுலாவின் முதல் போட்டோவைப் பதிவிட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அவரிடமிருந்து அடுத்தடுத்து புகைப்படப் பதிவுகள் வரலாம். அவற்றில் பிகினி புகைப்படங்களும் இருக்குமா என்ற ஆவல் சிலருக்கு இருக்கும்.
முன்னணி கதாநாயகிகள் 'கடல், நீச்சல்' என்றாலே பிகினி புகைப்படங்களைப் பகிர்வது கட்டாயமாகிவிட்ட இந்தக் காலத்தில் அதை எதிர்பார்க்கும் ரசிகர்களின் ஆசை நிறைவேற வாய்ப்புண்டு.