'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் கராத்தே கார்த்தி. மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் அகில இந்திய காவல் துறை பாக்சிங் போட்டியில் 2003 ஆம் ஆண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். அதுமட்டுமல்லாது கராத்தே பிளாக் பெல்ட் வாங்கியதோடு, அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக் பாக்சிங் ஆகிய கலைகளும் கற்றவர்.
சினிமா மீதும், நடிப்பின் மீதும் வைத்திருந்த ஆதீத காதலால் போலீஸ் வேலையை துறந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்யத் துவங்கினார். கமலின் தசாவதாரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை துவங்கினார்.
சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், பிகில், பேட்ட, இரவுக்கு ஆயிரம் கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சங்கத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தனது 14 வருட போராட்டத்திலிருந்து டாக்டர்தான் என்னை காப்பாற்றினார் என்கிறார் கராத்தே கார்த்திக்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கைதி படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு டாக்டர் படத்தில் வாய்ப்பளித்தனர். எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து வந்த முதல் வாய்ப்பு இதுதான். தற்போது நிறைய இயக்குனர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அது இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டது. என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கராத்தே கார்த்தி.