ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞராக நடித்திருக்கும் சூர்யா, இருளர் இன மக்களுக்காக வாதாடும் ஒரு வழக்கினை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஐ.ஜி பெருமாள் சாமியாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். இவர் திருட்டுப்போன நகைகளை பற்றி விசாரிக்கும்போது அடகு கடை வைத்திருப்பவரிடம் விசாரிப்பார். அப்போது தமிழ் தெரிந்த அவர் ஹிந்தியில் பேசுவார். அதைக்கேட்டு பளார் என அவரது கன்னத்தில் அறையும் பிரகாஷ்ராஜ், தமிழில் பேசு என்பார். இந்த காட்சி தற்போது ஒருசாரர் மத்தியில் விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.
அதையடுத்து பிரகாஷ்ராஜ் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஜெய்பீம் படத்தில் பழங்குடியின மக்களின் வேதனையை பார்க்காமல் அநியாயத்தை பார்த்து பரிதாபப்படாமல் ஹிந்தியில் பேசியவரை நான் அடித்த விஷயத்தைதான் பெருசு படுத்துகிறார்கள் .இவர்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான். இது அவர்களின் வேற மாதிரியான நோக்கத்தைதான் வெளிப்படுத்துகிறது. அதோடு ஒரு திரைப்படம் என்று வருகிறபோது சில விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் கேள்வி கேட்காமல் இருக்க ஹிந்தியில் பேசினால் இப்படித்தான் நடந்து கொள்வார்.
இந்த ஜெய்பீம் படம் 1990களின் பின்னணியாகக் கொண்டது. அந்த கேரக்டருக்கு ஹிந்தி திணிக்கப்பட்டு இருந்தால் இப்படித்தான் செய்திருப்பார். முறையான கல்வி பெறாத பழங்குடியினர் பெண்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட வழக்குகள் ஏராளம். அதனால் போதுமான கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஹிந்தியில் பேசிய அவரை தமிழில் பேசு என்று அந்த போலீஸ் அதிகாரி அடிப்பார். இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது இல்லாமல் சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை தவறான நோக்கத்தில் யாரும் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.




