நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா தற்போது புதிய ரோலில் மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரியாகிவுள்ளார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நல்லதொரு குடும்ப கதையாக ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. தற்போது டாப் ஹிட் சீரியலில் இடம் பிடித்துள்ள இத்தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார் ஷீலா. தொடரில் ஒரு திருப்புமுனையாக ஷீலாவின் லட்சுமி கதாபாத்திரம் இறந்ததாக காண்பிக்கப்பட்டது. பல ரசிகர்களுக்கு அவரது கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் ஷீலாவை விஜய் டிவி வேண்டுமென்றே வெளியேற்றியதாகவும் வதந்திகள் கிளம்பியது. அந்த வதந்திகளுக்கு அப்போது மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்திருந்த ஷீலா, விரைவில் விஜய் டிவியிலேயே மீண்டும் என்னை பார்க்கலாம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷீலா 'பாக்கியலட்சுமி' தொடரில் சூப்பரான கம்பேக்கை கொடுத்துள்ளார். 'பாக்கியலட்சுமி' தொடரில் இரண்டாவது நாயகி ராதிகாவின் அம்மாவாக ஷீலா நடித்து வருகிறார். வரும் எபிசோடுகளில் ராதிகா கதாபாத்திரம் நெகடிவ் ஷேடில் மாறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷீலா, ராதிகாவின் அம்மாவாக நடித்து வருவதால் லட்சுமி அம்மாவை புதிய ரோலில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.