லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் |
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரெட்டி, மூன்றாம் உலக தீவில் பிச்சைக்காரர்களை விட மோசமான நிலையில் இருந்ததாக கூறியுள்ளார்.
ஜீ தமிழில் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவரில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகின்றனர். சர்வைவர் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகி வெளியில் வரும் அனைவருமே ஏதோ ஒரு சோக கீதத்தை பாடி வருகின்றனர். அந்த வகையில் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆன காயத்ரி ரெட்டி, நீண்ட நாட்களாக மூன்றாம் உலக தீவில் இருந்தார். அதிக நாட்கள் மூன்றாம் உலகத் தீவில் இருந்த ஒரே நபர் காயத்ரி தான்.
இந்நிலையில் அங்கு அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து தற்போது பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், 'சர்வைவர் நிகழ்ச்சியில் மூன்றாம் உலகத் தீவில் நான் சில கஷ்டங்களை அனுபவித்தாலும் அந்த இடத்தை, உப்பில்லாத உணவை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். மற்ற போட்டியாளர்களுடன் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கஷ்டங்கள் தெரிந்திருக்காது. மூன்றாம் உலகத் தீவில் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரை சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். அங்கு உணவில்லாது தவிப்பது மிகவும் மோசமான விஷயம். அது பிச்சை எடுப்பதை விட கஷ்டமாக இருந்தது. ஒருமுறை நான் இன்னொருவர் சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவை கூட சாப்பிட்டேன்' என்ற அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார்.