10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, வேல ராமமூர்த்தி, ஜெகபதிபாபு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தங்கைக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்னே நிற்கும் அண்ணனாக சூரக்கோட்டை ஊராட்சி தலைவர் காளையனாக அதிரடி காட்டி உள்ளார் ரஜினி. சூரக்கோட்டை முதல் கோல்கட்டா வரை கதை பயணிக்கும்படி அமைந்துள்ளது.
கிராமத்து கதைக்களம், அண்ணன் - தங்கை பாசம் என பக்கா கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகி உள்ளதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலர் வெளியான உடனே ரசிகர்கள் அதிகம் கொண்டாடினர். டுவிட்டரில் டாப் லெவலில் டிரெண்ட் ஆனது. அதேசமயம் விஸ்வாசம் படத்தின் பல காட்சிகள் இந்த படத்தில் பிரதிபலிப்பதாக விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு நிச்சயம் ரசிகர்களும் சரவெடி, அதிரடி தான்.




