பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தற்போது கட்டம் சரியில்லை. அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து பதிவேற்றிய விவகாரத்தில் சிக்கி உள்ளார். இந்நிலையில் புதிதாக ஷில்பா ஷெட்டிக்கு ஒரு சிக்கல் வந்தது. ஷில்பா ஷெட்டி மீதும் அவரது தாயார் சுனந்தா மீதும் லக்னோவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. .
ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் 'லோசிஸ் வெல்னஸ் சென்டர் என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அந்த தொழில் கைவிடப்பட்டது. என்றாலும், லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவே இல்லை, அதோடு ஷில்பா ஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்று இருவரும் போலீஸில் புகார் செய்தனர்.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டியையும் அவரது தாயாரையும் போலீசார் இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், ஷில்பா ஷெட்டி உட்பட பலர் மீது எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. தற்போது விசாணைக்கு பிறகு ஷில்பா ஷெட்டிக்கும் மற்றும் அவரது அம்மாவிற்கும் இந்த மோசடியில் தொடர்பில் என்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷில்பா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியுள்ளார்.




