‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

அரசியலில் இருந்து ரஜினி விலகிக் கொண்ட நிலையில் விஜய்க்கு அரசியல் ஆசை அதிகரித்திருப்பதாக வெளிவரும் தகவல்களை உறுதி செய்வது போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி வருகிறது. அரசியலில் இறங்கினால் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிடலாம் என்று விஜய் பச்சைக்கொடி காட்டினார்.
இதனால் இந்த தேர்ததலில் பல்வேறு பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இதனால் விஜய் உற்சாகம் அடைந்துள்ளனார். நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ரகசியமாக நடந்தது.
வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு விஜய் சால்வை அணிவித்து வாழ்த்தினார். கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. மக்களுக்காக நன்றாக உழைத்து, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று விஜய் பேசியதாக தெரிகிறது.