'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.
நெஞ்சுக்கு நீதி படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உதயநிதியை சந்தித்த பிறகு இது தொடர்பாக உதய நிதி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனது நெஞ்சுக்கு நீதி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ரசூல் இருவரும் என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். என்று எழுதியுள்ளார்.