ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார். இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது, படத்தின் டப்பிங் பணிகளும் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதை விட விரைவாக பணிகள் முடிந்திருக்கிறது.
"ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதைதான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது" என்கிறார் இயக்குனர் து.பா.சரவணன்.