'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இத்தாலியில் நடக்கும் காதல் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. பொங்கல் விருந்தாக ஜனவரி 14-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஸ்பெசலாக இருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது ராதேஷ்யாம் படத்தின் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க மட்டும் ரூ. 50 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் கிளைமாக்ஸ் காட்சி பிரமாண்டமாகவும், பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளதாம்.
இதனிடையே ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக். 23ல் வெளியாகிறது. இதில் விக்ரமாதித்யா என்ற பாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அப்பாத்திரத்தை விளக்கும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏற்பாட்டை படக்குழு செய்துள்ளது. படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.




