அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கொரியன் படத்தை காப்பியடித்து மாநாடு படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் கொடுத்துள்ளார். அந்த செய்தி முற்றிலும் தவறானது, வெறும் டிரைலரை வைத்து படத்தை முடிவு செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாநாடு'. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
இதனிடையே இந்த படம் 2017ம் ஆண்டு வெளிவந்த கொரியன் படமான 'ஏ டே' என்ற படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கொரியன் பட நிறுவனம் புகார் அளித்துள்ளதாகவும், அந்த பிரச்னையை தீர்க்க படக்குழு முயற்சித்து வருவதாகவும் செய்திகள் பரவின.
இதை மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார். தினமலருக்கு அவர் அளித்த பேட்டியில், ‛‛முதலில் இப்படி ஒரு செய்தி வெளியானதே முற்றிலும் தவறு. டைம் லூப் என்பது சர்வதேச அளவிலான பொதுவான கதை. கோவை பின்னணியில் அரசியல் களமாக கொண்டு நாங்கள் படம் எடுத்துள்ளோம். வெறும் டிரைலரை வைத்து மட்டும் ஒரு படத்தை எப்படி முடிவு செய்ய முடியும். இது கொரியன் பட காப்பி கிடையாது. எந்த கொரியன் பட நிறுவனமும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. அந்த செய்தியும் தவறானது. இந்த படத்தை நாங்கள் ஆங்கிலத்திலும் டப் செய்து சர்வதேச அளவில் வெளியிட உள்ளோம். காப்பி படமாக இருந்தால் ஆங்கிலத்தில் வெளியிட முடியுமா'' என்றார்.