சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல பாலிவுட் நடிகை யுவிகா சவுத்ரி. ஓம் சாந்தி ஓம், எனிமி, தி பவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார், பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு யுவிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். யுவிகா சவுத்ரி தனது டுவிட்டர் பதிவில், நான் பேசிய வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், அந்த வார்த்தைகள் திரித்து பரப்பப்பட்டுள்ளது யாருடைய மனதையும் நான் காயப்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவர் மீதும் எனக்கு நிறைய அன்பு உள்ளது. என்று தெரிவித்தார்.
என்றாலும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹன்சி போலீசார் நேற்று யுவிகா சவுத்ரியை திடீரென கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மாலையில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.