பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைத்து நடிகைகளுமே அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அழகான அந்தப் புகைப்படங்கள் அவர்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை வாங்கித் தரும். அந்த அழகிய புகைப்படங்களுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களை யாரும் புகைப்படங்களாக வெளியிட்டது கிடையாது. ஆனால், அதற்குக் கூட ஒரு 'பிஹின்ட் தி சீன்ஸ்' புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.
விதவிதமான ஆடைகளை அணிந்து பொருத்தமாக இருக்கிறதா என அவர் பார்க்கும் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியம்தான். ஒரு சிறிய அறைக்குள் கட்டில் மேல் பல விதமான ஆடைகள் இருக்க கண்ணாடி முன்பு நின்று எந்த ஆடை பொருத்தமாக இருக்கிறது என ராஷி அழகு பார்க்கும் அந்த 'பிஹின்ட் தி சீன்ஸ்' புகைப்படங்களை 'குழப்பம்' எனக் குறிப்பிட்டுள்ளார் ராஷி.
பத்து விதமான ஆடைகள் அணிந்து திருப்தியில்லாமல் போய் கடைசியில் முதலில் அணிந்த ஆடைதான் அழகாக இருந்தது என அதைத் தேடிப் பிடித்து அணிபவர்கள் பெண்கள் என யாரோ எப்போதோ சொன்ன ஞாபகம். ஆனால், ராஷி கண்ணாவுக்கு அவர் அணியும் ஆடைகள் அழகாகவே உள்ளன.