என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
தீபாவளி தினத்தன்று 'அண்ணாத்த, மாநாடு, எனிமி' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்தப் போட்டியிலிருந்து 'மாநாடு' படம் விலகியது. அதிகமான தியேட்டர்களில் வெளியிட விரும்பி 'மாநாடு' பட வெளியீட்டை நவம்பர் 25ம் தேதிக்கு தயாரிப்பாளர் தள்ளி வைத்துவிட்டார். அதனால், தற்போது 'அண்ணாத்த, எனிமி' ஆகிய படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளன.
ஒரே சமயத்தில் 'அண்ணாத்த' படத்துடன் மேலும் இரண்டு படங்களுக்குத் தியேட்டர்களை ஒதுக்குவதில் சிரமம் என தியேட்டர்காரர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம். 'மாநாடு' படத்தை 500 தியேட்டர்களிலாவது வெளியிட வேண்டும் என அதன் தயாரிப்பாளர் விரும்பினாராம்.
'அண்ணாத்த' படத்திற்கு மட்டுமே 600 தியேட்டர்கள் போய்விடும் நிலையில் தற்போது 'எனிமி' படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. 'மாநாடு' போட்டியிலிருந்து விலகியதால் அது 'எனிமி' படத்திற்கு லாபமாக அமைந்துள்ளது. மேலும், 'எனிமி' படத்திற்கான வியாபாரமும் முடிவடைந்துவிட்டது.
'அண்ணாத்த, எனிமி' இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.