நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலிமை திரைப்படம் தொடர்பாக பேட்டியளித்த இயக்குனர் எச்.வினோத், ‛அஜித் கதையைக் கேட்டதும், வில்லன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னா அல்லது அர்ஜுன் தாஸ் பொருத்தமாக இருப்பதாகச் சொன்னதாக,' குறிப்பிட்டார்.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் பிரசன்னா, ‛எனது அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. வலிமை வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்றாலும் கூட பெரிய விஷயங்கள் என்னைச் சேரும் என்று நம்புகிறேன்.' எனப் பதிவிட்டுள்ளார்.