'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பாலிவுட் படம் ஒன்றில் மூலம் சினிமாவிற்கு வந்தார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள இவர், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தை 5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருவதாக காஜல் அகர்வால் அறிவித்துள்ளார். இதற்கு காரணமான ரசிகர்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.