புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் , குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛அண்ணாத்த. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ள நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர், இருபாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்போது ஆயுத பூஜை திருநாளில் டீசரை வெளியிட்டுள்ளனர்.
1.44 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் மொத்தமும் ரஜினி மட்டுமே உள்ளார். ‛‛கிராமத்தானை குணமாத்தான பார்த்திருப்ப... கோபப்பட்டு பார்த்தது இல்லையே... காட்டாறு... அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது... எனும் வசனம் பேசியபடி ஆக்ஷனில் இறங்குகிறார். ஆங்காங்கே திருவிழா காட்சிகள், ஆக்ஷன் என இந்த டீசர் பயணிக்கிறது. டீசரின் முடிவில் வா சாமி என ரஜினி கூற ஒவ்வொரு டிரக் வாகனமும் வெடித்து சிதறுவது போன்று முடித்துள்ளனர்.
இந்த டீசரை பார்க்கும்போது என்ன மாதிரியான கதை என புரிந்து கொள்ள முடியவில்லை, அதேசமயம் நிச்சயம் கிராமத்து மண்வாசனை கலந்த அதிரடி ஆக்ஷன் படமாகவும், குடும்ப படமாகவும் இருக்கும் என்பதை மட்டும் உணர முடிகிறது. விஸ்வாசம் படத்தில் பல காட்சிகளை ஆங்காங்கே நினைவுப்படுத்துகிறது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் துளி கூட அவர்களது முகங்களை காட்டவில்லை. ரஜினி மட்டுமே டீசர் முழுக்க வருகிறார்.
அண்ணாத்த படத்தின் டீசரை ரஜினி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். அரைமணிநேரத்திலேயே 3.25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதோடு டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது.