'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கீதா கோவிந்தம் என்கிற தெலுங்குப் படத்தில் ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ராஷ்மிகா மந்தனா, கடந்த இரண்டு வருடங்களுக்குள் பான் இந்தியா நடிகை என்கிற லெவலுக்கு சென்றுவிட்டார். தற்போது இந்தியில் மிஷன் மஞ்சு மற்றும் குட்பை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தநிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை பெங்காலி பெண் தோற்றத்தில் இருப்பது போன்று ஓவியம் ஒன்றை வரைந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்த்து ரொம்பவே மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா, வரும் நாட்களில் பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ரொம்பவே ஆசையாக இருப்பதாகவும் அதற்கு அச்சாரம் போடுவதுபோல ரசிகர் தன்னை பெங்காலி பெண் போலவே ஓவியம் வரைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.