லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, கடந்த 9-ந்தேதி திரைக்கு வந்துள்ள டாக்டர் படம் வசூல் ரீதியான மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது. 50 சதவீதம் இருக்கைகளில் மூன்று நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்து சிவகார்த்திகேயனின் முந்தைய பட வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.
இந்தநிலையில் அடுத்தபடியாக சிபிசக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் அந்த படத்தையும் முடித்து விட்டாராம். இன்னும் சில தினங்களில் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கி விடும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரகனி, பாலசரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.