சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஸ்ரீ லீலா! | அஜித் குமார் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? நடிகர் ரமேஷ் கண்ணா வெளியிட்ட தகவல் | 'விஜய் 69' பட நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா? | தனக்கு பதிலாக 2 முன்னணி கதாநாயகிகளை சிபாரிசு செய்த சமந்தா | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் கைது | பஸ் விபத்தில் சிக்கிய காந்தாரா படக்குழு ; படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதா? | 25 நாட்களைக் கடந்து லாபத்தை அள்ளிக் கொடுத்த 'அமரன், லக்கி பாஸ்கர்' | 'புஷ்பா 2' பின்னணி இசை: உறுதி செய்த சாம் சிஎஸ் | பெரிய படம், சிறிய படம் பட்ஜெட் தீர்மானிக்கக் கூடாது - சித்தார்த் | 'மல்லி' தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஜெய் எஸ் கே! |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் திலீப்.. இவரும் நடிகை மஞ்சுவாரியரும் 1998ல் காதல் திருமணம் செய்துகொண்டனர்.. இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் இருக்கிறார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2௦15ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர் இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை காவ்யா மாதவனை கடந்த 2016 நவம்பரில் இரண்டாவது திருமணம் செய்தார் நடிகர் திலீப்.
இதையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.. இதற்கு மகாலட்சுமி என பெயர் சூட்டினார்கள். கடந்த 2019ல் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஒட்டி அந்த கொண்டாட்டத்தின்போது ஒருமுறை அதனுடைய முகத்தை வெளியுலகிற்கு காட்டினார்கள்.
தற்போது அந்த குழந்தைக்கு இரண்டு வயதாகி அழகான சிறுமியாக நன்கு வளர்ந்துள்ள நிலையில் தாங்கள் நால்வரும் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் நடிகர் திலீப். என்னதான் சின்னம்மா என்றாலும் திலீப்பின் முதல் மகளையும் (மீனாட்சியை) காவ்யா மாதவன் ரொம்பவே பாசத்துடன் அரவணைத்து வருகிறார் என்பது இந்த குடும்ப புகைப்படத்தில் வெளிப்படும் சந்தோஷத்திலேயே தெரிகிறது.