டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானாலும் கூட, அந்தப்படம் வெளியாகி சுமார் 5 வருடங்கள் எந்தப்படமும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், பஹத் பாசில் - நயன்தாராவை இணைத்து பாட்டு என்கிற படத்தை இயக்கப்போவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் தற்போது பாட்டு படத்தை அல்போன்ஸ் புத்ரன் தள்ளிவைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் தற்போது பஹத் பாசில் தெலுங்கு மொழியிலும் நடிக்க துவங்கி பிஸியாகி விட்டதால், பாட்டு படத்தை துவங்க இன்னும் பல மாதங்கள் ஆகுமாம். அதேசமயம் பிரித்விராஜூக்காக இவர் தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றை அவரிடம் சொல்ல, பிரித்விராஜும் அந்த கதையை ஒகே பண்ணி விட்டாராம். அதனால் பிரித்விராஜ் படத்தை முதலில் ஆரம்பிக்கும் பணியில் இறங்கி இருக்கிறாராம் அல்போன்ஸ் புத்ரன்.