பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார் அப்ரிட் ஷைன். அதன்பிறகு அவர் இயக்கிய இரண்டு படங்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்தநிலையில் தனக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்து, தனது கேரியர் உயர காரணமான அப்ரிட் ஷைனுக்கு, தான் நடிக்கும் மகாவீர்யர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் நிவின்பாலி. மேலும் இந்தப்படத்தை நிவின்பாலியே தயாரித்தும் உள்ளார். இரண்டு ஹீரோக்கள் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஆசிப் அலி இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்து கேரளா திரும்பியுள்ளனர் மகாவீர்யர் படக்குழுவினர்.