டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா | சிரஞ்சீவி குடும்பத்தினர் பார்த்து ரசித்த 'ஓஜி' | சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு |
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் புதிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து அரசாணை பிறப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
பவன் கல்யாண் நடித்து கடந்த வாரம் வெளியான 'ஓஜி' படத்திற்கு அப்படியான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தெலுங்கானா அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.
இதனிடையே, டிக்கெட் கட்டண உயர்வுக்காக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதனால், பழைய கட்டணத்தில் ரசிகர்கள் இனி அப்படத்தைப் பார்க்க முடியும். இன்று முதல் அது அமலுக்கு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் புதிய படங்களுக்கு டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலங்கானா அரசு கைவிடும் எனத் தெரிகிறது.