'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபகாலமாகவே பிரபலங்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் அல்லது வெளியூர் பயணமாக விமான நிலையத்திற்கு வந்து செல்லும்போதும் அவர்களது தீவிர ரசிகர்கள் எப்படியாவது தங்களது அபிமான நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். சில ரசிகர்கள் அனுமதி பெற்று எடுத்துக் கொள்கின்றனர். சில நட்சத்திரங்கள் பொறுமையாக அதற்கு ஒத்துழைக்கின்றனர். ஆனால் பல ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக தங்களது நட்சத்திரங்களுக்கு இடையூறாக செல்பி எடுக்க முயல்வதால் தேவையில்லாத சலசலப்பு சர்ச்சையும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் விமான நிலையத்திற்கு வந்த நடிகர் நாகார்ஜூனாவுடன் அவரது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சித்தபோது அவரது பாதுகாவலர்கள் அவரை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு தனக்குத் தெரியாமல் இப்படி நடந்து விட்டது என நாகார்ஜூனா அதற்கு வருத்தம் தெரிவித்ததுடன் மீண்டும் விமான நிலையம் வந்தபோது அந்த ரசிகரை வரவழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவி தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை முதுகில் கை வைத்து தள்ளிவிட்ட நிகழ்வு ஒன்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் விமான நிலையத்திலிருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா ஆகியோர் வெளியேறும்போது ரசிகர் ஒருவர் சிரஞ்சீவியுடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார், அதை கண்டும் காணாதவாறு சிரஞ்சீவி அமைதியாக சென்றாலும் மீண்டும் அந்த நபர் சிரஞ்சீவியின் பாதையில் குறுக்கிட்டு தொடர்ந்து செல்பி எடுக்க முயற்சிக்கும் சமயத்தில் தான் சிரஞ்சீவி அவரது முதுகில் கை வைத்து ஒதுக்கிவிட்டு நடந்து செல்வது போன்று அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.