இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மயுகம் படம் இன்று பிப்ரவரி 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கடந்த வருடங்களை கணக்கிட்டு பார்த்தால் நடிகர் மம்முட்டி மிக துணிச்சலான முடிவுகளை எடுத்து பல வித்தியாசமான கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் இறுதியில் வெளியான காதல் : தி கோர் என்கிற படத்தில் கூட ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ஆச்சரியம் அளித்தார். இந்த பிரம்மயுகம் படத்தில் 70 வயதிற்கு மேலான ஒரு கிராமத்து பெரியவர் கதாபாத்திரத்தில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
ராகுல் சதாசிவன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய மம்முட்டி, “பிரம்மயுகம் படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை. எல்லாமே கதாபாத்திரங்கள் தான். அவர்களின் குணாதிசயங்கள் தான் ரசிகர்களின் பார்வையில் யார் ஹீரோ, யார் வில்லன் என்பதை தீர்மானிக்கும். இந்த படம் குறித்து எந்தவித முன் எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படம் இப்படித்தான் நகரும் என்கிற யூகங்கள் எதுவும் இல்லாமல் படம் பார்க்க அமர்ந்தால் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.