தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் 'துறமுகம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் உள்ளிட்ட படங்களை இயக்கி பல விருதுகளை வென்ற இயக்குனருமான ராஜீவ் ரவி என்பவர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மிகவும் தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜோஸ் தாமஸ் என்பவர் பண மோசடி செய்தது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை தயாரிப்பதற்காக இவர் சில போலியான ஆவணங்களை வழங்கி சுமார் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக கில்பர்ட் என்பவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜோஸ் தாமஸ் அவரது இல்லத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். துறமுகம் படம் தோல்வி அடைந்ததாலும் சரியான சமயத்தில் வெளிவராமல் தயாரிப்பிலேயே நீண்ட தாமதத்தை ஏற்படுத்தியதாலும் ஜோஸ் தாமஸுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதை சரியாக திருப்பி செலுத்த இயலாத சூழலில் தான் அவர் இவ்வாறு மோசடி செய்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.