''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக பல வருடங்கள் பயணித்து, பின்னர் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிகராக மாறி, சமீப காலமாக கதையின் நாயகனாக நடித்து வருபவர் பிஜூ மேனன். கடந்த சில வருடங்களுக்கு முன் இவரும் நடிகர் பிரித்விராஜும் இணைந்து நடித்த , ஈகோ பிரச்சனையை மையப்படுத்தி வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் பிஜுமேனனின் நடிப்பு ரொம்பவே பாராட்டப்பட்டது. ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அவர் நடித்துள்ள 'துண்டு' என்கிற திரைப்படம் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிஜுமேனன். சாதாரண அதிகாரியாக இருந்து உயர் அதிகாரி ஆவதற்காக அவர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் பலமுறை அவர் தோல்வியை தழுவுகிறார். வேறு ஒரு போலீஸ் அதிகாரி கொடுத்த ஆலோசனையின்படி போலீஸ் தேர்வில் பிட் (அதுதான் மலையாளத்தில் துண்டு) அடிக்க தயாராகிறார். மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தாரா, இல்லை சிக்கிக் கொண்டாரா என்பதை மையப்படுத்தி இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாகி உள்ளது. இதை சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரியாஸ் செரீப் என்பவர் இயக்கி உள்ளார்.