நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் அறிமுக படமாக இயக்கியிருந்தார். கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பஹத் பாஸில், அதற்கு நேர்மாறாக முழுக்க முழுக்க காமெடி கலந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். படமும் ரசிகர்களின் வரவேற்பை ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த படத்திற்கு முதலில் கதாநாயகனாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நடிகர் நிவின்பாலியிடம் தான். இந்த படத்தின் கதை பற்றி இயக்குனர் நிவின்பாலியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் அவர் துறைமுகம் மற்றும் படவேட்டு ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் பஹத் பாசிலுடன் ஏதேச்சையாக பேசும்போது இந்த கதை பற்றி அகில் சத்யன் கூறியுள்ளார். கதையில் ரொம்பவே இம்ப்ரஸ் ஆன பகத் பாஸில் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார்.
நிவின் பாலியிடம் ஏற்கனவே இந்த கதை குறித்து கூறியுள்ளதாக சொன்ன அகில் சத்யன் பின்னர் நிவின்பாலியை தொடர்பு கொண்டு, பஹத் பாசிலின் விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டதும் சந்தோஷமான நிவின்பாலி எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக இந்த கதையை பஹத் பாசிலுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். அதேசமயம் ஏற்கனவே நிவின்பாலிக்கு ஏற்றபடி எழுதப்பட்டிருந்த இந்த கதையில் அதன்பிறகு பஹத் பாசிலுக்காக மீண்டும் சில மாற்றங்களை செய்தாராம் அகில் சத்யன்.