'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷேன் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்பு தளங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறி இரு நடிகர்களுக்கும் மலையாள தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து தடை விதித்தது. இந்த நிலையில் இரு நடிகர்களும் மலையாள நடிகர் சங்கத்தில் விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்
ஸ்ரீநாத் பாசி கொடுத்துள்ள கடிதத்தில், தன்னை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டும் இனி சங்கத்தின் விதிமுறைகளின் படி நடப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஷேன் நிகாம் எழுதியுள்ள கடிதத்தில் 'ஆர்டிஎக்ஸ்' படப்பிடிப்பு தடைபட்டது தனது தவறினால் அல்ல என்றும், உடல்நலக் குறைவால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போதை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.