''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தென்னிந்திய மொழி படங்களிலேயே கமர்ஷியலாகவும் வியாபார ரீதியாகவும் ஒரு குறுகிய வட்டத்திலேயே பின்தங்கி இருந்தது என்றால் அது கன்னட திரையுலகம் மட்டும்தான். இந்தநிலையில் பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் கன்னட திரையுலகை நோக்கி தென்னிந்திய ரசிகர்களின் பார்வையை மட்டுமல்ல பாலிவுட் திரையுலகையே சேர்த்து திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் செட்டி என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வெளியாகும்போது சாதாரண படம் என்கிற அளவில் தான் வெளியானது. ஆனால் படம் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்களும் படம் பார்த்தவர்களின் ஆச்சரிய கருத்துக்களும் இந்த படத்திற்கான எல்லையை தற்போது விரிவுபடுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்த படத்தை தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. மலையாளத்தில் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் இந்த படத்தின் டப்பிங் உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இதன் பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்