கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
இயக்குனர் ராஜமவுலி தனது பிரம்மாண்ட படைப்புகள் மூலம் தென்னிந்தியா பாலிவுட் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அதுமட்டுமல்ல இவரது படங்கள் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இவரது பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை பார்த்துவிட்டு பல தருணங்களில் புகழ்ந்து பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள 'பியாண்ட் பெஸ்ட் 2022' திரைப்பட விழா துவங்குகிறது. இந்த விழாவில் இயக்குனர் ராஜமவுலிக்கு கவுரவம் சேர்க்கும் விதமாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு என்கிற பிரிவில் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஈகா, மகதீரா, பாகுபலி 2 பாகங்கள் மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள் செப்.,30 முதல் அக்.,11 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பிரம்மாண்ட திரையரங்குகளில் ரசிகர்களுக்காக திரையிடப்பட இருக்கின்றன.
இந்த தகவலை இந்த விழாவை நடத்தும் அமைப்பே அதிகாரப்பூர்வமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்த விழாவில் நேரிலேயே கலந்துகொள்ளும் இயக்குனர் ராஜமவுலி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவும் இருக்கிறாராம். இது இயக்குனர் ராஜமவுலிக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லலாம்.