Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பஹத் பாசில் நடிக்கும் ‛ஹனுமான் கியர்'

09 செப், 2022 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Fahadh-Faasil's-Next-Titled-Hanuman-Gear-Announced-on-Onam-2022-produced-by-Supergood-Films

தமிழில் புது வசந்தம் படம் மூலமாக கால் பதித்த ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பல ஹிட் படங்களை கொடுத்ததுடன், பல திறமையான இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நிறுவனமும் கூட. அந்தவகையில் இதுவரை 95 படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் தனது 96வது படமாக மலையாளத்தில் ‛ஹனுமான் கியர்' என்கிற படத்தை தயாரிக்கிறது. பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் இயக்குகிறார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஒரு ஜீப்பின் மீது ஏறி நின்றபடி வேட்டியை மடித்துக்கட்டிய பஹத் பாசில் கையை உயர்த்தியபடி நிற்பதையும் கீழே மக்கள் கூடி நிற்பதையும் பார்க்கும்போது போராட்ட களம் கொண்ட கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது. கடந்த 2014ல் திலீப் நடித்த வில்லாளி வீரன் என்கிற படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ், தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படம் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டி 71... இன்னோசென்ட் 50... ஜெயராம் 30...மம்முட்டி 71... இன்னோசென்ட் 50... ஜெயராம் ... ராஜமவுலியின் படங்களுக்கு அமெரிக்க திரைப்பட விழா வழங்கும் கவுரவம் ராஜமவுலியின் படங்களுக்கு அமெரிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in