சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ராஜமவுலியின் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்து உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது ஆதிபுருஸ், சலார் போன்ற புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபாஸுக்கு பெண் பார்த்தாகி விட்டதாகவும், இந்த ஆண்டு கண்டிப்பாக அவருக்கு திருமணம் நடைபெற்று விடும் என்றும் டோலிவுட் மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரபாஸின் உறவினர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதையடுத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து கொண்டார்கள். அதன் பிறகும் பிரபாஸ் திருமணம் குறித்து பல தகவல்கள் மீடியாக்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு கண்டிப்பாக பிரபாஸிற்கு திருமணம் நடைபெற்று விடும் என்று அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தெரிவித்திருப்பதால் இன்னும் சில மாதங்களில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிரபாஸே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.