''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை சேத்தனா ராஜ் என்பவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். 21 வயதான இவர் தனது உடல் எடை குறைப்புக்காக பெங்களூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்காக சேர்ந்தார். கடந்த மே 16-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு அவரது உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை
மேலும் அந்த மருத்துவமனையில் ஐசியு வசதி இல்லாததால் அருகில் இருந்த இன்னொரு பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டுசென்ற மருத்துவர்கள், அங்கிருந்த மருத்துவர்களை மிரட்டி அவருக்கு மேல் சிகிச்சை அளிக்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அங்கே கொண்டுவரப்பட்ட போதே அவர் உயிர் பிரிந்து இருந்தது என்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கூட நடிகை சேத்தனா ராஜ் தகவல் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரது பெற்றோர் மருத்துவமனையின் அஜாக்கிரதையால் தான் தனது மகளது உயிர் போய் விட்டது என்று குற்றம் சுமத்தி உள்ளார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போய் நடிகை உயிரிழந்த நிகழ்வு கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.