கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் |

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக வசன உச்சரிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்கள் மனதில் எளிதாக பதிந்தார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கேரள உறவினராக நடித்திருந்தார் கோட்டயம் பிரதீப். அந்தப் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் அவரது மவுசு இன்னும் கூடியது. அதைத்தொடர்ந்து மீண்டும் தமிழில் தெறி படத்தில் கேரளாவில் விஜய் நடத்தும் பேக்கரியில் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நடித்துள்ள மோகன்லாலின் ஆராட்டு படம் நாளை வெளியாக உள்ளது.




