Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இங்கு காதல் கற்றுத்தரப்படும்

இங்கு காதல் கற்றுத்தரப்படும்,Ingu Kadhal Katrutharapadum
  • இங்கு காதல் கற்றுத்தரப்படும்
  • புதுமுகம்
  • புதுமுகம்
  • இயக்குனர்: ஸ்ரீதரன்
30 அக், 2013 - 16:30 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இங்கு காதல் கற்றுத்தரப்படும்

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


நாயகியின் வீட்டில் தாய் மாமன் மகனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தறாங்க. அது பிடிக்காத நாயகி  முன்பின் அறிமுகம் இல்லாத நாயகனுடன் சும்மா  ஒரு போட்டோ எடுத்து  அதை  வீட்டில்  இருப்பவர்கள் தற்செயலாக பார்க்க வைத்து நாடகம் போடுறார். பின் நாயகனை  ஒரு டி.வி  ஷோவில் பார்க்கறார். அவர் சொன்ன காதல் பற்றிய கருத்துக்கள்  தன்னது போலவே இருக்கு, ஒரே வேவ் லெங்க்த் (எண்ண அலைவரிசை)  என நினைக்கறார். இன்னொரு சந்தர்ப்பத்துல 4 ரவுடிங்க கிட்டே இருந்து நாயகியை நாயகன் காப்பாத்தறார். இந்த  அபூர்வமான  இரு நிகழ்வுகளால் நாயகி, நாயகன் பக்கம் சாய்ந்து காதலிக்கறார்.

நாயகனோட நண்பர்கள்கிட்டே தன் காதலை சொல்லும்போது அவங்க  ஒரு குண்டைத்தூக்கிப்போடறாங்க. நாயகனுக்கு ஆல்ரெடி  ஒரு பார்க்காத காதல் கோட்டை டைப் லவ் இருக்கு, ஆனா ஒரு பைக் விபத்துல அவர் தலைல அடிபட்டதால டெம்பரவரி கஜினியா ஆள் நடமாடிட்டு  இருக்கார். நாயகிக்கு அதிர்ச்சி. இடைவேளை. இப்போ ஃபிளாஸ் பேக். நாயகன் ரவிவர்மா பரம்பரைல வராட்டியும் சுமாரான  ஓவியன். 24  மணி  நேரமும் அண்ணன் சும்மா இருந்தாலும்  கற்பனைல ஒரு பெண்ணை வரையறார். அந்தப்பொண்ணை அம்மா, நண்பர்கள் எல்லாரும் ஆஹா, ஓஹோ பேஷ் பேஷ் அப்டினு பாராட்டறாங்க.

அதே ஓவியப்பெண்ணை அதே  முகச்சாயலோடு  நாயகன் நடு ரோட்ல பார்க்கறார். அந்த நாயகியிடம் காதலை சொல்ல  ரோஜாவோட  போறார். அப்போதான் விபத்து நடக்குது . மேலே சொன்ன அந்த நாயகியும், கீழே சொன்ன இந்த  நாயகியும்,  ஒரே ஆள் தான். பழசை எல்லாம் மறந்த  நாயகன் எப்படி நாயகி கை பிடிக்கறார் என்பதே க்ளைமாக்ஸ் 

புதுமுகம் ஸ்ரீநாத் தான் தயாரிப்பாளர் மகன் அப்டினு நினைக்கறேன். ஆரம்ப கால விஜய் மாதிரி  ஆடல், பாடல், கேலி, கிண்டல் என புகுந்து விளையாடறார். முகத்தில்  நடிப்பைத்தான் காணவில்லை. 19 வயசிலேயே நடிக்க வந்த  இவர் முயற்சியைப்பாராட்டியே ஆகனும்

நாயகியாக தருஷனா. பயங்கரமாக மேக்கப் போட்டே மாநிறமாகத்தெரியும் சுமார் குமாரி. பாடல் காட்சிகளில் கொஞ்சம்  சோபிக்கிறார். அவ்வளவுதான், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

லிவிங்ஸ்டன், ஆர்த்தி, பாண்டு, இமான் அண்ணாச்சி, ஷியாம்சுந்தர, மீனாகுமாரி, பேபி ஸ்நேகா ஆகியோரும் ஆங்காங்கே வந்து போறாங்க. பாண்டுவுக்கு ஒரு காமெடி டிராக் என்ற பெயரில்  காதல் ட்யூசன் செட்டர் நடத்தும் மொக்கையான  கேரக்டர். எடுபடவில்லை.


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. போஸ்டர்  டிசைனில்  நாயகிக்கு ஏதோ கிளாமர் காட்சிகள்  இருக்கும் என்று நம்ப வைத்தது. நாயகனை மட்டும் லாங்க்  ஷாட் ஸ்டில்லாக வைத்தது.

2. படத்தின் கதைக்கும், டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை என  யாரும்  சொல்லி விடக்கூடாது என  ஒரு காமெடி டிராக்கை டைட்டில் பேஸ் பண்ணி எடுத்து இணைத்தது


இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நாயகி நாயகனிடம் “உனக்காக காத்திருந்தேன்,  நீ வர்லை, அதுக்குப்பின் ஆர்த்திக்கு ஃபோன் போட்டேன் என்கிறார். ஆனா ஃபிளாஸ் பேக் காட்டும்போது அப்படி அவர் யாருக்கும்  ஃபோனே பண்ணவில்லை.  காத்திருந்து  கடுப்பாகி கிளம்பிடறார்.

2. வில்லன் பலுவந்தமா திணிக்கப்பட்ட கேரக்டர். ஆல்ரெடி  திரைக்கதை, நாயக்ன் என ஏகப்பட்ட  வில்லன்கள் படத்துல  இருக்கும்போது  தனியா  ஒரு வில்லன் எதுக்கு?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. காதல்னா என்ன? டைம் பாஸ். நோ நோ டைம் பாம், நமக்கு நாமே வெச்சுக்கும் டைம் பாம்.

2. பவுர்ணமியா இருந்த என் வாழ்வு  காதலுக்குப்பின் அமாவாசையாய் மாறிடுச்சு.

3. முதுமையில் வரும் காதல் முழுமையானது. இளமையில் வரும் காதல் வயசுக்கோளாறு.

சி.பி.கமெண்ட் : படம் ரொம்ப மொக்கை.



வாசகர் கருத்து (2)

ramesh - chennai,இந்தியா
20 நவ, 2013 - 10:41 Report Abuse
ramesh படம் நன்றாக உள்ளது இதுபோல் தவறாக விமர்சிக்க வேண்டாம்
Rate this:
sahithya - chennai,இந்தியா
22 நவ, 2013 - 23:25Report Abuse
sahithyaநான் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாஹித்யா ,படத்தின் பாடல்களையோ பின்னணி இசை பற்றியோ ஒருவரி கூட எழுதாமல் படம் ரொம்ப மொக்கை என்று விமர்சிப்பது மனதை புண்படுத்துகிறது ,விமர்சனம் எழுதிய செந்தில்குமார் மீண்டும் படம் பார்த்து இசை பாடல்கள் பற்றி சரியான விமர்சனம் செய்ய வேண்டும் ,...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in