Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இங்கிலீஷ் விங்கிலீஷ்

இங்கிலீஷ் விங்கிலீஷ்,English Vinglish
 • இங்கிலீஷ் விங்கிலீஷ்
 • ..
 • ஸ்ரீ தேவி
 • இயக்குனர்: கெளரி ஷிண்டே
14 அக், 2012 - 17:23 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இங்கிலீஷ் விங்கிலீஷ்

தினமலர் விமர்சனம்


“சமையலுக்கும், மையலுக்குமே மனைவி’ என்கிற ஆணாதிக்க விதியை உடைத்து, ஒரு சராசரி தாய் அந்நிய மண்ணில் சாதிக்கும் கதை.

லட்டு செய்வதில் கில்லாடியான சஷி காட்போலே (ஸ்ரீதேவி) இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவள் கணவன் சதீஷ் (அடில் ஹுசைன்). “ஆங்கிலம் தெரியாது’ என்கிற ஒரேயொரு குறையால், மொத்தக் குடும்பத்தின் கேலிக்கு சஷி ஆளாகிறாள்! சகோதரியின் மகள் திருமணத்திற்காக நியூயார்க் செல்லும் சஷி, ஆங்கிலம் கற்று அசத்துகிறாள். இதுதான் கதை.

திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் ஸ்ரீதேவிக்கு. “16 வயதினிலே’ ஸ்ரீதேவி போலவே இருக்கிறார். திக்கித் திணறி அவர் ஆங்கிலம் பேசும்போதும், ஆங்கிலம் கற்று நியூயார்க் வீதியில் சுழன்று வரும்போதும் “ஒரு நல்ல நடிகையை இத்தனைகாலம் இழந்து விட்டோமே!’ என்று ஏங்க வைக்கிறார். சகோதரி மகள் ராதா (பிரியா ஆனந்த்)வின் உதவியோடு சஷி ஆங்கிலம் கற்கும் காட்சிகள், அடடா... இதமான தென்றல்!

அமெரிக்க அழகைச் சொல்லும் லஷ்மண் உடேக்கரின் ஒளிப்பதிவு, இசைஞானி இசையின் சாயலோடு ஒலிக்கும் அமீத் த்ரிவேதியின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, 140 நிமிடத்தில் படத்தினை நறுக்கென தந்திருக்கும் எடிட்டர் ஹேமாந்தி சர்க்காரின் படத்தொகுப்பு படுபிரமாதம். அதிலும், கவுரி ஷிண்டே(பால்கி)யின் “ஆண் சமைத்தால் அது கலை. பெண் சமைத்தால் அது கடமை!’ போன்ற வசனங்கள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. படத்தில் அஜித்குமார் வருகிறார்! “தைரியமா பேசுங்க. நாம முன்னால வந்துகிட்டிருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க தமிழ் கத்துக்க ஆரம்பிச்சுடுவாங்க!’ படத்தில் சஷிக்கும், இங்கே நமக்கும் நம்பிக்கை தருகிறார்.

வன்முறை துளியும் இல்லாமல், நவரசங்களை அருமையாக கோர்த்திருக்கிறார் இயக்குனர் கவுரி ஷிண்டே.

மொத்தத்தில் "இங்க்லிஷ் விங்க்லிஷ்" - "ஜெய ஜெய ஸ்ரீதேவி"

ரசிகன் குரல்: படம் பூராவும் ஸ்ரீதேவி வந்தாலும், அலுக்கவேயில்லையே பாஸ்!வாசகர் கருத்து (24)

naga - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
02 டிச, 2012 - 13:09 Report Abuse
 naga பெஸ்ட் movie
Rate this:
Elango - chennai,இந்தியா
29 நவ, 2012 - 12:42 Report Abuse
 Elango நல்ல படம் . ராதிகா மற்றும் விக்ரம் நடித்து டடீவியில் மட்டும் வெளியான "சிறகுகள்" படத்தை போன்று , இதுவும் "மிக மிக நல்ல படம் " :)
Rate this:
poojakumar - Singapore,சிங்கப்பூர்
19 நவ, 2012 - 05:20 Report Abuse
 poojakumar Wonderful movie and it gives nice message. motivates all the home makers.
Rate this:
ஆதி - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04 நவ, 2012 - 20:27 Report Abuse
 ஆதி இதே போன்ற படம் ஒன்று, ராதிகா நடித்து டிவியில் மட்டும் வெளி வந்தது.... யாருக்காவது அந்த படத்தை கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.
Rate this:
narayananrima - jamnagar,
01 நவ, 2012 - 15:10 Report Abuse
 narayananrima சூப்பர் பிலிம் .ஸ்ரீதேவி அக்டிங் சூப்பர்
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in