Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்,Irandam Ulagam
03 டிச, 2013 - 18:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இரண்டாம் உலகம்

தினமலர் விமர்சனம்


இரண்டு ஆர்யா, மூன்று அனுஷ்கா, இரண்டு உலகம் முடிவில் மூன்றாவதாகவும் ஒரு உலகம்... எக்கச்க பிரமாண்டம், ஏறக்குறைய 50 கோடி பட்ஜெட், ஏகோபித்த எதிர்பார்ப்புகள்... இத்தனையும் தாங்கி இதோ, வெளிவந்து விட்டது இரண்டாம் உலகம். எப்படி இருக்கிறது? இனி பார்ப்போம்...

பூமியில் இருப்பது மாதிரியே வெவ்வேறு உலகங்கள் வேறு வேறு கிரகங்களில் இருக்கின்றன. இந்த பூமியில் வாழும் மனிதர்கள் சாயலிலேயே மனிதர்கள் அங்கும் வாழ்கின்றனர்... எனும் டைட்டில் கார்டு வாசகங்களுக்கிடையே "இரண்டாம் உலகம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு இங்கு மண்ணுலகில் வாழும் ஆர்யா - அனுஷ்கா மாதிரியே இன்னொரு உலகமான இரண்டாம் உலகத்திலும் ஒரு ஆர்யா அனுஷ்கா வாழ்வதாக காதில் பூச்சுற்றும் கதையுடன் ஆரம்பமாகிறது திரைப்படம்! அப்பொழுதே இங்கு ஆர்யாவும் அனுஷ்காவும் காதலர்களாக வாழ்வது மாதிரியே இன்னொரு உலகத்திலும் அவர்கள் இருவருமே காதலர்களாக வாழ வேண்டிய கட்டாயமென்ன? எனும் கேள்வியும் எழும் இடத்தில் இயக்குநர் செல்வராகவன் பதில் சொல்ல தயங்கும்பட்சத்தில் தியேட்டரில் மெலிதாய் குறட்டை சப்தமும் கிளம்புகிறது. அதையும் தாண்டி, தவிர்த்து கண்விழித்து பார்த்தால், இங்கு இந்த பூலோகத்தில் மருத்துவம் படிக்கும் அனுஷ்காவிற்கு உடம்பு முடியாத அப்பாவுடனும், நல் உள்ளத்துடனும் போராடும் ஆர்யா மீது காதல். ஆனால் அனுஷ்கா மீது காதலை ஏற்படுத்த மறுக்கிறது ஆர்யாவின் குடும்ப சூழல். குடும்ப சூழலை மீறி ஒரு கட்டத்தில் ஆர்யாவுக்கு அனுஷ்கா மீது காதல் வரும் போது, அனுஷ்கா வேறு ஒருவருக்கு மனைவியாக நிச்சயிக்கப்படுகிறார். அதனால் அவர் பின் லோ லோ என அலையும் ஆர்யா, அவரது சம்மதம் பெறும் போது அனுஷ்கா எதிர்பாராமல் இறக்கிறார்.

அதே நேரம் இன்னொரு உலகம், இரண்டாம் உலகத்தில் தளபதியின் வீரம் இல்லா மகனாக இருக்கும் ஆர்யாவுக்கு அந்த ஊர் அநாதை அழகி அனுஷ்கா மீது காதல்! வீரம் நிறைந்த அனுஷ்காவிற்கு அந்த உலகத்து போர் படையில் வீராங்கனையாக செயல்பட ஆசை. பெண்களை படையில் சேர்த்துக்கொள்ள விரும்பாத அந்த உலகம் அனுஷ்காவை புறக்கணிக்கிறது. ராஜா அனுஷ்காவை அந்தப்புரத்திற்கு அழைத்து போக சொல்கிறார். ஆர்யா, அனுஷ்கா தனது ஆள் என்கிறார். ராஜாவை எதிர்த்து பேசிய ஆர்யா தளபதியில் மகன் என்பதால் சலுகை காட்டப்படுகிறது. எப்படி? ராஜாவிற்கு பெருமை சேர்க்கும் சிங்கத்தை வேட்டையாடி, சிங்கத்தோலை கொண்டு வந்தால் ஆர்யாவுக்கு அனுஷ்காவை விட்டுத்தருவதாக மூன்று நாள் கெடு விதிக்கிறார் அரசர். கோழை ஆர்யா, அனுஷ்காவிற்காக வீரம் பொருந்தியவராகி மினி டைனோசர் சைசில் கிராபிக்சில் வித்தியாசமாகத் தெரியும் திரியும் ஒரு ஜந்துவை (அதுதான் அந்த உலகத்து சிங்கமாம்.. நம்புவோம்) வேட்டையாடி அதன் தோலை ராஜாவிடம் கொடுத்து அனுஷ்காவிற்கு மாலையிடுகிறார். இதனால் தனது வீராங்கனை லட்சியம் வீணாகி ஆர்யாவின் மனைவி ஆன வருத்தத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போகிறார் அனுஷ்!.

இன்டர்வெல்லுக்கு முன் இரண்டு அனுஷ்காக்களும் இறந்து போகின்றனர். அதன்பின் பூலோகத்து ஆர்யா, இரண்டாம் உலக அம்மா கடவுளின் கிருபையால் அந்த உலகத்துக்கு போகிறார். அங்கு அம்மா கடவுளை திருடிப்போகும் கயவர்களிடமிருந்து இரண்டு ஆர்யாக்களும் அம்மா கடவுளை மீட்கப்போராடுகின்றனர். என்ன அதிசயம்? உயிரோடு இருக்கும் அந்த உலகத்து அனுஷ்காவும் இவர்களோடு சேர்ந்து அம்மா கடவுளை மீட்டு இரண்டாம் உலகத்துக்கு நல்லது செய்கிறார்.

இந்த இரண்டு உலகத்து காதல் கதையும் நீரில் மூழ்கியபடி பூலோகத்து ஆர்யா பிளாஷ் பேக் கதையாக சொல்ல ஆரம்பிக்கும் போது தொடங்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் அவர் சொல்லி முடித்ததும் நான் நினைத்த 2 கதைகளையும் சொல்லி முடித்த திருப்தியோடு கண்ணை மூடுகிறேன் எனும் போது நாங்கள் இப்போது தான் விழிக்கிறோம் என்று தியேட்டரில் சிலர் குறட்டை விடும் சப்தத்தில் இருந்து விடுபட்டு வீட்டுக்கு கிளம்ப எத்தனிக்கின்றனர். அதே நேரம் என்னையும் கண்ணை மூட விடாமல் கரை சேர்க்கும் கடவுள் இதோ ஏதோ ஒரு புது உலகத்துக்கு அனுப்புகிறார் என்று மூன்றாவது உலகத்தில் கரை ஒதுங்குகிறார் ஆர்யா. அங்கு தென்படும் குடில்களில் ஒரு குடிலின் கதவை தட்டும் ஆர்யாவுக்கு அதிர்ச்சி! காரணம், அங்கு கதவை திறக்கும் மூன்றாவது அனுஷ்கா தான்.. இரண்டாம் உலகமே புரியல.. இதுல மூன்றாவது உலகத்திற்கு அச்சாரமா? எனக் கேட்டபடி... தியேட்டரை விட்டு எகிறுகின்றனர் ரசிகர்கள்!

இரண்டு உலகத்து ஆர்யாக்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் காதல், காதல் என்று திரியும் பூலோகத்து ஆர்யாவை விட இரண்டாம் உலகத்து கட்டுமஸ்து ஆர்யா கச்சிதம்!

மூன்றாம் உலகத்து அனுஷ்கா சில நிமிடங்ளே வந்தாலும் சிறப்பு! இரண்டாம் உலகத்து அனுஷ்காவின் வாள் வீச்சும் பூலோகத்து காதல் கண் பேச்சும் கூட சூப்பர்ப்! பூலோக அனுஷ்காவின் தோழிகள், பேராசிரியை இரண்டாம் உலகத்து அம்மா கடவுள், ராஜா, தளபதி, பாலே நடனக்காரர்கள் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் கூட கச்சிதம்!

ராம்ஜியின் ஒளிப்பதில் பூலோகத்தை காட்டும் ஆரம்ப காட்சிகளில் வரும் மழைத்தூறல், இரண்டாம் உலகத்திற்கான லைட்டிங், கலர் புல், கலக்கல் விஷயங்கள்.. பூக்கள் மலரும் புது உலக கிராபிக்ஸ் டெக்னிக்கல் எல்லாம் படத்தின் பெரிய பிளஸ்! ஆனால் கதை, திரைக்கதை விஷயத்தில் உள்ள பூச்சுற்றல் பெரிய மைனஸ்!.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அதிரும் அனிருத்தும் கூட இரண்டாம் உலகத்திற்கு பெரிய பரிமாணத்தை தருகின்றன. ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு புயல்வேக ராக்கெட்டில் போனால் கூட 300 நாட்களுக்கு மேலாகும் எனும் விஞ்ஞானத்தை உடைப்பது மாதிரி சில ஹாலிவுட் படங்களைப் பார்த்து செல்வராகனும் ஒரு நீரோடையில் ஒரு முங்கு முங்கினால் இன்னொரு உலகத்திற்கு போய் விட முடியும் என கதை எழுதியிருப்பது சுத்த ஹம்பக்!

சின்ன வயதில் நம் கனவில் கலர் கலராய் புரியாத தெரியாத மாதிரி ஏதோதோ வந்து போகுமே... அது மாதிரி செல்வராகவனின் கனவில் வந்ததையயெல்லாம் படமாக்க முயன்றது போன்று மொத்த படமும் இருப்பது தான் இரண்டாம் உலகம் படத்தின் சின்ன பலமும், பெரிய பலவீனமும் எனலாம்!

"அம்மா கடவுள், இரட்டை இலை முளை விடுவது என ஏதோ ஹைடெக் அதிமுக கொள்கை பரப்பு படம் மாதிரி இரண்டாம் உலகத்தை படைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கு என்னவாயிற்று? தெரியவில்லை!

கிளைமாக்ஸ் போர்முனை முத்தக்காட்சிகள், புதிதாக பூக்கள் மலரும் இரண்டாம் உலக காட்சிகள் என இதுவரை தமிழ் சினிமா கண்டிராத, ரசிக்கும் விஷயங்கள் நிறைய இருந்தாலும் இந்த படத்தை இன்னொரு உலகத்தின் ரசிகர்களும் பார்த்தார்கள் என்றால், இரண்டாம் உலகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்!

"இரண்டாம் உலகம் - செல்வராகவனின் உலகம் - ரசிகர்களின் உலகமா? தெரியவில்லை!!!



--------------------------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்


தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார் செல்வராகவன்.

"இந்த உலகத்தில் நாம் இருப்பது போலவே வேறு ஓர் உலகத்திலும் அச்சு அசலாக நம்மை மாதிரியே உருவமுள்ள மனிதர்கள் ஒரே நேரத்தில் இருக்கலாம் என்ற ஐன்ஸ்டீனின் ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு பென்10ல் வரும் பரெலெல் வேல்டு பாணியில் கதை பண்ணியிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் இருக்கும் ஆர்யா, அனுஷ்காவைக் காதலிக்க, திடீரென அனுஷ்கா இறந்து விடுகிறார். தவித்துப் போகும் ஆர்யா, அனுஷ்காவை மீண்டும் பார்க்கிறார். எங்கே? வேறு ஓர் உலகத்தில்! ஆனால் அந்த இரண்டாம் உலக அனுஷ்காவுக்கு அங்கே ஒரு காதலனும் உண்டு. அதுவும் ஆர்யாதான். இரண்டு ஆர்யாக்களில் யாருக்கு அனுஷ்கா கிடைத்தார்? என்பதை பிரம்மாண்டமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அனிமேஷன், சி.ஜி., எஃபெக்ட்ஸ், கேமரா என்று எல்லாமே தமிழுக்குப் புதிய அவதார்.

அனுஷ்காவுக்கு இது முத்திரை பதிக்கும் படம் ஒரே நேரத்தில் நான்கு பேரைச் சுழற்றி அடிப்பதாகட்டும், கல்யாணமெல்லாம் வேண்டாம் என்று தெனாவெட்டாய்த் திரிவதாகட்டும், ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அப்பாவியாய் தயங்கித் தயங்கி மருகுவதாகட்டும் எல்லாவற்றையும் அனுபவித்துச் செய்திருக்கிறார்.

ஆர்யா கம்பீரம், இரண்டு ஆர்யாக்களும் ஒருவரை ஒருவர் பொறாமையுடன் வாரிக் கொள்வது புன்னகைக்க வைக்கிறது. ஆனால் எப்போதும் முறைப்பாகவே இருப்பது ஏனோ? மனித முக பறக்கும் சிங்கம், வானத்தில் வட்டமிடும் வினோதப் பறவை, தலைக்கு மேல் சுற்றும் கோள்கள் போன்ற அந்த உலக அம்புலிமாமா சமாசாரங்கள் குழந்தைகளைக் கவரும்.

கடவுள் என்றாலே கிரீடம், நான்கு கைகள், சூலம் என்றே பார்த்துப் பழகிய நமக்கு எந்த படாடோபமும் இன்றி ஒரு வெள்ளைக்காரச் சிறுமியை கடவுளாகக் காண்பித்திருப்பது ரொம்பவே புதுசு. எல்லோர் வாயிலும் தமிழ்! அசுரனும் வெள்ளைக்காரன்! ஆனால் அசுரன், கடவுளை கடத்திப் போகும் காட்சிகள் கொட்டாவி. அதேபோல் இடைவேளைக்குப் பிறகு ரிப்பீடட் காட்சிகளால் ரசிகர்கள் அடிக்கடி செல்ஃபோனில் டைம் பார்க்கிறார்கள்!

அந்தக் கல்லூரி லெக்ஸரர், அனுஷ்காவின் லொடலொட தோழி, ஏன் அந்த நாய் கூட பொருத்தம்!

வெற்று வானத்தில் அடியில் ஆர்யாவும், அனுஷ்காவும் காதலைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் கவிதை என்றால் அடுத்த விநாடியே அனுஷ்கா செத்துப் போவது அதிர்ச்சி.
பாடல்கள் எல்லாம் தாளம் போட வைக்கின்றன. (எது ஹாரிஸ்? எது அனிருத்?) பின்னணி இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் நம்மை வேறு ஓர் உலகத்திற்கு நிஜமாகவே கொண்டு செய்கின்றன.

நிறைய ஆங்கில ஃபேண்டஸி படங்களைப் பார்த்தவர்களுக்கு மட்டும் இந்தப் படம் பிடிக்கும்!

இரண்டாம் உலகம் - ஹாலிவுட் படங்களுக்கு சவால்

ஆஹா: அனுஷ்கா, கேமரா, அனிமேஷன், மேக்கிங்

ஹிஹி: சீரியஸான காட்சிகளில் சிரிப்பு வருகிறது.

குமுதம் ரேட்டிங்: நன்று



வாசகர் கருத்து (182)

purushothaman - chennai,இந்தியா
26 டிச, 2013 - 17:50 Report Abuse
purushothaman நல்ல கற்பனை, நல்ல முற்சி. இப்படி சொல்ல தைரியம் வெண்டும், இந்த படம் hollywood டிரெக்டரால் செய்திருந்தால் ஆஸ்கார் விருது
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
29 டிச, 2013 - 20:03Report Abuse
m.sekarநண்பா நீங்க ஒரு நபர் தான் இரண்டாம் உலகம் படத்தினை பற்றி உலக தரத்தில் உன்னத கருத்தினை தெரிவித்து இருக்கிறிர்கள் நன்றி . நானும் இதே தான் கூறினேன்.இரண்டாம் உலகம் திரைபடத்திற்கு இனிமேல் தான் ஒரு மிக பெரிய அடையாளம் கிடைக்க போகிறது. 75 வருட தமிழ் சினிமாவின் புதிய அடையாளம் இரண்டாம் உலகம் திரைப்படம்...
Rate this:
joseph - chennai  ( Posted via: Dinamalar Android App )
17 டிச, 2013 - 22:16 Report Abuse
joseph thinamalar review is really fantastic.feeling much happier than watching film
Rate this:
suja - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 டிச, 2013 - 22:48 Report Abuse
suja யாருக்குமே புரியக்கூடாதுன்னு எடுத்த படம் போல
Rate this:
m.sekar - MADURAI,இந்தியா
16 டிச, 2013 - 00:43 Report Abuse
m.sekar படம் நல்ல இல்லை என்று கூறுவதற்கு 180 கருத்துக்கள ?
Rate this:
mathi - Madurai  ( Posted via: Dinamalar Android App )
14 டிச, 2013 - 22:45 Report Abuse
mathi இது எல்லாம் படமா இல்லை காவ்வீயம் படம் பார்பதற்க்கு முன்பு அபிராமி அபிராமி அசிங்கம் இது படம் பார்த்த பின்பு
Rate this:
மேலும் 176 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in