Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ரகளபுரம்

ரகளபுரம்,Ragalaipuram
30 அக், 2013 - 17:36 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ரகளபுரம்

 

தினமலர் விமர்சனம்


கருணாஸ், காமெடி போலீசாக ‘கடி‘, ஓ... சாரி, நடித்திருக்கும் திரைப்படம்!

அப்பா இறந்ததால் அவர் பார்த்த போலீஸ் வேலை கருணாஸுக்கு கிடைக்கிறது. கூடவே அப்பா வாங்கி வைத்து போன கடன்களும், தங்கைகளின் கல்யாண செலவுகளும் கூட காத்திருக்கின்றது. இதனால் போலீஸ் யூனிபார்மில் புலம்பியபடி திரியும் பயந்தாங்கொள்ளி கருணாஸுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அருள்பார்வை கிட்ட, அதன்மூலம் பிற போலீஸ் செய்த சாகசங்களுக்கெல்லாம் இவர்தான் காரணம்... என கொண்டாடப்படுகிறார். கூடவே, சம்பளமும் உயருகிறது! சந்தோஷமும் நிறைகிறது! அதே நேரம், குடிகார போலீஸ் டிரைவர் டெல்லிகணேஷின் தில்லுமுல்லால் கருணாஸுக்கு கேன்சர் இருப்பதாக அவருக்கே தெரியவர, அது முதல் நிஜமாகவே ஏதாவது சாதிக்க வேண்டும் என்னும் ஆசையில் களம் இறங்கும் கருணாஸ்., ரவுடிகளை ஒழித்து, ராஜ்ஜியத்தை நிலைநாட்டினாரா? அல்லது ரவுடிகளால் ஒழித்துக் கட்டப்பட்டாரா...?! என்பது க்ளைமாக்ஸ்! கூடவே கருணாஸுக்கு, தனக்கு கேன்சர் இல்லை என்னும் உண்மை தெரிந்ததா? கேன்சருக்காக காதலி அங்கனா ராயை சுற்றலில் விட்ட கருணாஸ், அவரை மீண்டும் கட்டித்தழுவினாரா? கரம் பிடித்தாரா? என்பது சிரி்ப்பு என்னும் பெயரில் சீரியசாக படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!

கருணாஸ், அங்கனாராய், கோவை சரளா, பவன், சஞ்சனாசிங், எம்.எஸ்.பாஸ்கர், உமா பத்மநாபன் என ஒரு டஜன் நட்சத்திரங்கள் சீரியசாக நம்மை சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரித்திருக்கின்றனர். ஆனால் ரசிகர்களின் முகத்தில் சிரிப்புக்கு பதில் கடுப்பு மிஞ்சுவதுதான் பலவீனம்!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுடுகாட்டு கானா சூப்பர்ப்! ஆர்‌.வேல்ராஜின் ஒளிப்பதிவு பெரிய ப்ளஸ்! ஆயிரமிருந்தும் வசதிகள் இருந்தும் மனோகரின் இயக்கத்தில் ரகளபுரம் - ரவுசுபுரம்! ரசிகர்புரமா..?!-------------------------------------குமுதம் விமர்சனம்


கறுப்பு, பர்சனாலிட்டி குறைவு, புத்திசாலித்தனம்‌ கம்மி என்றெல்லாம் படத்தில் டயலாக் வைத்து தன்னை நன்றாகவே நியாயப்படுத்தி விடுகிறார் கருணாஸ்!

அப்புறம் நல்ல கலரில் ஒரு கதாநாயகியைத் தேடிப்பிடித்து எல்லாரையும் வயிறெரிய விடுவார். இதில் ஒன்றுக்கு இரண்டு கில்மாக்கள் வேறு. அங்‌கங்கே டபுள் மீனிங் டயலாக்ஸ். சி க்ளாஸ் ஆடியன்சுக்கு இது போதும் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

துப்பறியும் சாம்பு டைப் கதைதான்.

போலீஸ் கருணாஸின் ரத்த சாம்பிள் மாறியதால் அவருக்கு கேன்சர் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். பணியில் இருக்கும்போது இறந்தால் 10 லட்ச ரூபாய் கிடைக்கும் என்பதால் எதிரிகளின் களத்தில் நேருக்கு நேர் மோதுகிறார். அந்த டுபாக்கூர் மோதல் எல்லாம் வெற்றியாகி பிரமோஷனைப் பெற்றுத்தருகிறது. அப்புறம் என்ன? உண்மை தெரிந்து காதலியுடன் டூயட்! (இயக்கம் மனோகர்)

அங்கனா ராய், சஞ்சனா சிங் என்ற இரண்டு ஜில்மாக்கள். தொப்புள் பிரதேசத்தை நன்றாகக் காட்டுகிறார்கள்!

அவ்வப்போது மயில்சாமி, கருணாஸ் பற்றி செமை பில்டப் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். அவர் யார் என்பது ஹா ஹா!

ரகளபுரம் - சிரிப்பு போலீஸ்!

குமுதம் ரேட்டிங் - ஓகே.வாசகர் கருத்து (8)

naga - madurai  ( Posted via: Dinamalar Android App )
15 நவ, 2013 - 16:41 Report Abuse
naga தூக்கம் வருவதற்கு நல்ல படம்
Rate this:
k.Raghu - simili  ( Posted via: Dinamalar Android App )
31 அக், 2013 - 09:43 Report Abuse
k.Raghu இதற்கா ஆசைபட்டாய் கருணாசு
Rate this:
pugalendi - singapore,சிங்கப்பூர்
27 அக், 2013 - 12:55 Report Abuse
pugalendi இது சிரிப்பு படம், சிரிப்பு வருவதும் வராததும் அவரவர் மனநிலைமை சார்ந்தது.
Rate this:
Ramesh Kumar - Chennai,இந்தியா
25 அக், 2013 - 18:07 Report Abuse
Ramesh Kumar dis movie is dubbed from malayalam movie "aanaval mothiram" who played the role srinivasan and sureshgopi......
Rate this:
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
24 அக், 2013 - 22:44 Report Abuse
தமிழ் சிங்கம் படத்தில் சம்பாரிக்க முடியவில்லை என்றால், ஜாதி அமைப்பினரை தூண்டிவிட்டு, அதன்மூலம் ராமதாஸ் மாதிரி ஜெயித்து, மிக பெரிய கல்லா கட்ட திட்டமிட்டார். ஆனால் கருனாசிற்கு கெட்ட நேரமிது. எதை செய்தாலும், சீரழிகிறது. காரணம், நினைப்பு சரியில்லை.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in