“கொலைவெறி’ன்னா என்ன? நமக்குள்ள கொலவெறி உண்டா? இந்த கேள்விகளுக்கு ஆர்வமா விடை தேடுறவங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் (!) மாலை பொழுதின் மயக்கத்திலே
ஷேவிங் பண்ணாத ஒரு பையனுக்கு (ஹீரோ) சினிமா இயக்குனர் ஆகணும்னு ஆசை. அதிர்ஷ்டம் கதவைத் தட்டுது. ஒர வாய்ப்பு தாடியை தேடி வருது. நம்பி கைநீட்டுற தாடிகிட்டே “ஆனா... ஒரு கண்டிஷன் என்னை ஹீரோவா வைச்சுதான் நீ படம் எடுக்கணும்!’னு பணம் கொடுத்த பெரிசு கண்டிஷன்போட... ஆடிப்போற தாடி, பெருசோட முகத்துல கை வைச்சுடுது. அய்யய்யோ அப்புறம்? நாம பயப்படுற மாதிரியெல்லாம் ஒண்ணும் இல்லை. அடியாட்களை அனுப்பி தாடியை பிரிச்சு மேய வேண்டிய பெருசு, கண்ணை கசக்கிட்டே போய் இன்னொரு பெருசுகிட்டே அழ... அந்த பெரிசு தாடியை கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ண... வாங்குன காசை திருப்பிக் கொடுக்க முடியாத தாடி... ஒர காபி ஷாப்புக்குள்ள ஓடி ஒளியுது. வெளியில பேய் மழை. ஹீரோவையும், கேமராவையும் பத்திரமா காபி ஷாப்புக்குள்ள கொண்டு வந்துட்ட இயக்குனருக்கு, மழைநேரத்துல கேமராவை வெளியில கொண்டு போக மனசு வரலை! அதான்... மொத்த படத்தையும் காபி ஷாப்புக்குள்ளேயே முடிச்சு, நம்மளையும் சேர்த்து முடிக்கிறாரு! இதெல்லாம் விட கொடுமை... கடைசிவரைக்கும் மழை விடலை!
காபி ஷாப் மேனேஜர், அங்க வேலை பார்க்குற ரெண்டு பசங்க, காபி குடிக்க வர்ற ஒரு பொண்ணு (ஹீரோயின்), சண்டை போடறதுக்காகவே வர்ற ஒரு குடும்பம், அப்புறம் தாடி ஹீரோ... அத்தனைபேரும் மாத்தி மாத்தி சளைக்காம தத்துவம் பேச, தெருநாய்களெல்லாம் திரும்பிப் பார்க்கற அளவுக்கு தியேட்டர்ல “உச்’ சத்தம். “இந்த இம்சை போதாது’ன்னு இசை வேற! நடந்தா, உட்கார்ந்தா, தலையை சொறிஞ்சா, மூக்கு சிந்துனா... இப்படி எல்லா காட்சிகளுக்கும் வெறித்தனமா இசை ஓடுது. இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி சூப்பர் “ட்விஸ்ட்’டோட வருது “க்ளைமாக்ஸ்’. ஆமாங்க... பெருசை வைச்சே படம் எடக்க தாடி சம்மதிக்கிறாப்ல!
“அதெல்லாம் சரி! கதை என்ன?ன்னு சொல்லவே இல்லைய?’ சொல்லணும்னு ஆசைதான்! ஆனா... என்ன சொல்றதுன்னு தெரியல!
மொத்தத்தில் காபி ஷாப் ஜாக்கிரதை!
ரசிகன் குரல்: உங்க சித்தப்பனுக்கு “சூன்யம்’ வைக்கனும்னு சொன்னியே.... பேசாம இங்க கூட்டிட்டு வந்துடேன்!