Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஈசன்

ஈசன்,Eesan
  • ஈசன்
  • சமுத்திரக்கனி
  • அபிநயா
  • இயக்குனர்: சசிக்குமார்
30 டிச, 2010 - 11:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஈசன்

 தினமலர் விமர்சனம்


சுப்ரமணியபுரம் எம்.சசிகுமார் எழுதி, தயாரித்து, இயக்கி இருக்கும் படம் தான் "ஈசன்". சின்னஅளவில் கிராமத்து அரசியலையும். அடிதடியும் தன் முந்தைய படத்தில் காட்டிய சசிகுமார், இதில் நகரத்து அரசியலையும், அடிதடியையும், அண்டர் கிரவுண்ட் சமாச்சாரங்களையும் படமாக்கியுள்ளார்.

ஆளுங்கட்சியின் அடாவடி அமைச்சர் ஏ.எல்.அழகப்பன், அவரது ரோமியோ மகன் வைபவ். அப்பாவிற்கு கமிஷன் தர மறுக்கும் தொழிலதிபர் பிரபுராஜனின் மகள், அபர்ணாவுடன் வைபவிற்கு, அப்பாக்களின் முட்டல் மோதல்களுக்கு முன்பே காதல்! பலகோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக முட்டி மோதிக்கொள்ளும் அமைச்சரும், தொழிலதிபரும் ஒற்றை மீட்டிங்கிலேயே சமாதானமாகி சம்பந்தி ஆக திட்டம் போடுகின்றனர். இந்த சமயத்தில் அமைச்சரின் ஒற்றை வாரிசான வைபவ் காணமல் போக, அவரது எஸ்கேப் கேஸை போலீஸ் அதிகாரி சமுத்திரகனி வசம் ஒப்படைக்கிறார் அமைச்சர் அழகப்பனால் கமிஷனர் ஆன காஜாமொய்தின்.

அமைச்சர் அழகப்பனுக்கும், அதிகாரி சமுத்திரகனிக்கும் ஏற்கனவே ஆகாது என்பதால் மகன் காணாமல் போன விஷயத்திலும் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன் விளைவு தனது மகனைத்தேடி தானே தனது அடிப்பொடிகளுடன் களத்தில் இறங்குகிறார் அமைச்சர்! ஆனாலும் கடமை உணர்வுடன் களத்தில் இறங்கிதேடுகிறார் சமுத்திரகனி. வைபவின் காதல் என்னஆனது...? காணமால்போக யார் காரணம்...? என்பது உள்ளிட்ட வினாக்களுக்கு வி்த்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்க முயற்சித்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறது "ஈசன்" படத்தின் மீதிக்கதை!

போலீஸ் அதிகாரி சங்கையாவாக வரும் சமுத்திரகனி நடிப்பில் சக்கைபோடு போட்டிருக்கிறார். இந்த யூனிஃபார்மை நான் எவ்ளோ லவ் பண்ணி போடுகிறேன் தெரியுமா... என்று கமிஷ்னரிடம் அவர் மல்லுகட்டும் இடங்களிலும், கடமை எனும் பெயரில் அடாவடி அமைச்சர்களுக்கு அவர் அடிபணிந்து போகவேண்டிய சூழலிலும் காட்டும் நடிப்பு மிரள வைக்கிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து க்ளைமாக்ஸில் அமைச்சரையும், அவரது கையாள் நமோ நாரயணனையும் போட்டுத்தள்ளும் போது நிஜத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கா‌லரை தூக்கி விட்டுக்‌கொள்வார்கள்.

செழியன் எனும் பெயரில் இரவு-பகல் என்று பாராமல் முழுநேர ரோமியோவாக வலம் வரும் வைபவ், தனது முந்தைய படங்களை காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் பாவம் க்ளைமாக்ஸில் அவருக்கு ஏற்படும் நி‌லைதான் பரிதாபம். அப்பாவின் எதிரிகள் அல்ல... வைபவ் படிக்கும் காலத்தில் செய்த ரோமியோ தனம் தான் அவர் காணாமல் போக காரணம் என்பது எதிர்பாராத திருப்பம். அமைச்சரின் கையாள், ‌கோபாலாக வரும் நமோ நாரயணனின் நடிப்பு நச் என்று இருக்கிறது.

ஏ.எல்.அழகப்பன் கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்து எம்.எல்.ஏ., அமைச்சர் என ஆகும்போது, சில அரசியல்வாதிகளை பிரதிபலித்திருந்தாலும், அவரது டப்பிங் வாய்ஸ் படத்தில் அவருக்கு பெரிய மைனஸ்.

வாய்பேச முடியாத பூரணி கேரக்டரில் வரும் அபினயா, ரேஷ்மாகவாக, வைபவின் காதலியா வரும் அபர்ணா, ஆர்த்தொடக்ஸ் ஃபேமிலி பெண்ணாக வரும் சியமளா எனும் ப்ரியா, அம்மா கேரக்டரில் வரும் துளசி என சகலரும் தங்கள் பங்கை சரியாவே செய்திருக்கின்றனர். அதிலும் வாய்பேச முடியாத பூரணிக்கு நிகழும் கொடூரமும், அதனால் அவரது குடும்பமே தற்‌கொலை செய்து கொள்ளும் விதமும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனாலும் அவரது தம்பி சிவன் கேரக்டரில் பள்ளி சிறுவனாக வரும் துஷ்யந்த், வைபவ் அவரது நண்பர் வினோத் உள்ளிட்டவர்களை தீர்த்து கட்டும் விதம் நம்பமுடியாதது. அதேமாதிரி அபினயாவின் அப்பா கேரக்டருக்கு காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்திருக்கும் டப்பிங் தனியாக தெரிவது மைனஸ்.

ஜேம்ஸ்வசந்தனின் இசையில், தஞ்சை செல்வியின் குரலில் ஒளிக்கும் ஜில்லா விட்டு... பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் பேசும்படி இல்லாதது குறை. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்!

இயக்குநர் சசிகுமார் தனது களமான கிராமங்களைவிட்டு நகரத்திற்கு வந்ததாலோ என்னவோ, சிட்டி பேஷன் களை குறைகூறும் "ஈசன்" பெரியளவில் "பேசுவான்" என்று சொல்ல முடியவி்ல்லை.

----------------------------------
கல்கி விமர்சனம்


ரத்தத்தையும், அதற்குக் காரணமான துரோகத்தையும் சுண்டக் காய்ச்சி சுப்ரமணியபுரம் தந்த சசிக்குமார், ஈசன் படத்தில் தொட்டிருப்பது, குற்றங்கள் செய்வதைப் பொழுதுப்போக்கென நினைக்கும் மேல்தட்டு வர்க்கத்தின் வக்கிரங்களை. ஒன்றும் புதிதில்லை என்றாலும் மனசை வலிக்கச் செய்யும் திரைக்கதையால் நிமிர்ந்து உட்காருகிறது திரைப்படம். வழக்கமான பழிவாங்கலே எனினும் அதனைச் செய்வது ஹீரோ இல்லை என்பதே தமிழ்த்திரைக்கு புதிதுதான். க்ளைமாக்ஸூம் எதிர்பார்க்கப்பட்டதுதான் எனினும் அது நாயகனின் துதி பாடவில்லை. தெரிந்தேதால தெரியாமலோ பல குற்றங்களுக்கு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை காரணம் என்பதை விளக்கிய காட்சிகளில் சசிக்குமார் டச்.

அரசியல்வாதிக்கும், தொழிலதிபருக்குமான அதிகாரப் போட்டியில் வாய்பேச இயலாத ஒரு பெண் சின்னாபின்னமாக்கப்படுகையிலும், அவள் குடும்பம் மார்ச்சுவரிக்குள் அடங்கிப் போகையிலும் நமது  கலாச்சாரப் பூச்சு  மீது  கோபம் வரவைக்கிறார் இயக்குனர் சசிக்குமார். படத்தில் ஹீரோ என்று யாருமில்லை. எனினும் நடிப்பில் ஃபர்ஸ்ட் மார்க் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு. மிடுக்கும், விறைப்புமான காக்கி  உடையில் அவர் காட்டும் முக பாவம்  செம ஷார்ப். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்  முன்னாள்  அரசியல்வாதி பாத்திரத்துக்கு அக்மார்க் பொருத்தம்.

வாய் பேச இயலாத அபிநயா அப்படியே நடித்திருப்பதில் அனுதாபத்தை அள்ளுகிறார். அவரின் தம்பியாக நடிக்கும் துஷ்யந்த் மீது ஆரம்பத்தில் வெறுப்பும், போகப்போக பாசமும் வருவதே சசிக்குமார் சக்ஸஸ் திரைக்கதை ஃபார்முலா !

ஆனா, குறைகள்  நிறைய இருக்கு. முக்கியமா பாடல்களும், பின்னணி இசையும் படத்தோடு ஒட்டவே இல்லை. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்துக்கு வேகத்தடைதான். அப்புறம் படம் ஏகப்பட்ட நீளம். அதனால அயர்ச்சியும், தளர்ச்சியும் பார்வையாளர்களிடம் ஒட்டிக்கொள்கின்றன. மருந்துக்குக்கூட நகைச்சுவை இல்லை. குற்றத்தின் ஆழத்தைப் புரியவைக்கணும்தான். அதற்காக காட்சிகளில் இத்தனை இறுக்கம் வேணுமா ?

எனினும், ஈசன் வழக்கமான கோடம்பாக்கக் கொத்துப் பரோட்டா இல்லை. ஒருமுறையேனும் எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்!



வாசகர் கருத்து (136)

parthi - sivakasi,இந்தியா
27 பிப், 2011 - 12:09 Report Abuse
 parthi padam...............super.........sir..........
Rate this:
karnan - cochin,இந்தியா
26 பிப், 2011 - 23:44 Report Abuse
 karnan “ இந்த படம் சுத்த வேஸ்ட். ப்ளீஸ் யாரும் இந்த படம் பார்க்க போகாதிங்க.. சசி பேசாம நடிக்க மட்டும் செய்ங்க டைரக்ட் பண்ணாதிங்க ,, இந்த படம் எடுத்து மொக்க டைரக்டர் லிஸ்ட் ல செர்ந்துடிங்க வாழ்த்துக்கள் ,,,காண பாடல் மட்டும் நல்லா இருக்கு..விக்ரம் தப்பிசாரு ... ”
Rate this:
Bala - Bangalore,இந்தியா
08 பிப், 2011 - 13:30 Report Abuse
 Bala படத்தில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அதற்காகவாவது ஒரு முறை பார்க்கலாம். உதாரணம் கொலையாளி விக்கிபீடியா புத்தகம் விற்பது போல் வந்து கதவு செயினை நறுக்கி வீட்டுக்குள் நுழைவது, மருத்துவமனையில் ஈ-மெயில் மூலம் prescription அதை hack செய்வது இப்படி நிறைய ......... Well Done சசி குமார்.....
Rate this:
ர.pandiyan - male,maldives,மாலத்தீவு
04 பிப், 2011 - 20:01 Report Abuse
 ர.pandiyan வெரி குட் சசி.
Rate this:
சூப்பர் பாஸ் - chennai,இந்தியா
21 ஜன, 2011 - 19:16 Report Abuse
 சூப்பர்  பாஸ் சசி சார் படம் நல்லா இருக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 131 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in