துடிக்கும் கரங்கள்,Thudikkum karangal
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஓடியன் டாக்கீஸ்
இயக்கம் - வேலுதாஸ்
இசை - ராகவ் பிரசாத்
நடிப்பு - விமல், மிஷா நரங், சதீஷ்
வெளியான தேதி - 8 செப்டம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

காலத்திற்கேற்றபடி கதையையும், கதாபாத்திரங்களையும் அப்டேட் செய்து கொண்டு படத்தை எடுத்தால்தான் இந்தக் கால ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க முடியும். கதையை மாற்றுகிறோமோ இல்லையோ, கதாபாத்திரங்களையாவது புதிதாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் வேலுதாஸ் நினைத்திருக்கிறார். அதனால்தான் கதாநாயகனின் கதாபாத்திரத்தை யு டியுபர் என உருவாக்கியிருக்கிறார்.

மக்களின் பிரச்சினைகளைப் பற்றி தனது 'கொத்து பரோட்டா' என்ற யு டியூப் சேனலில் பதிவிடுபவர் விமல். ஐஏஎஸ் பயிற்சிக்காகக் படிக்கும் தனது மகன் அனந்த் நாக்கைக் காணாமல் தேடி வரும் சங்கிலி முருகனின் வீடியோவை தனது சேனலில் போடுகிறார். அது மட்டுமல்ல அனந்த்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்குகிறார் விமல். அவரைத் தேடிக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

யு டியூபர் வெற்றி கதாபாத்திரத்தில் விமல். ஆக்ஷன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் ஒரே மாதிரியான நடிப்பையே வெளிப்படுத்தி இருக்கிறார். கிராமத்துக் கதைகளில் நடிப்பதைப் போலவே நடித்திருக்கிறார். இது சிட்டி சப்ஜெக்ட் என்பதால் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கலாம்.

விமல் ஜோடியாக மிஷா நரங். முதலில் விமலைப் பிடிக்கவில்லை எனச் சொல்லிவிட்டு பிறகு காதலிக்கிறார். படத்தில் கதாநாயகியும், சில காதல் காட்சிகளும் இருக்க வேண்டும் என்பதால் சேர்த்திருக்கிறார்கள்.

விமலின் நண்பனாக சதீஷ், இன்ஸ்பெக்டராக சௌந்தர், ஐ.ஜி ஆக சுரேஷ் மேனன், வில்லனாக பில்லி முரளி, பெரியவராக சங்கிலி முருகன் என படத்தில் பல கதாபாத்திரங்கள்.

படத்தில் இரண்டு, மூன்று கிளைக் கதைகள் இருப்பது விறுவிறுப்பைக் குறைத்துவிடுகிறது. அனந்தை விமல் தேடுவது ஒரு பக்கம், சௌந்தர் தேடுவது மறுபக்கம், வில்லன் முரளியின் கதை மற்றொரு பக்கம் என இவையனைத்தும் சேரும் ஒரே கதையில் வந்து சேர்கிறது. அதை இன்னும் சுவாரசியமான திரைக்கதையாக்கி இருக்கலாம். கிளைமாக்சுக்கு முன்பாக எதிர்பாராத திருப்பத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ராகவ் பிரசாத்தின் பின்னணி இசை, ரம்மியின் ஒளிப்பதிவு இயக்குனருக்குத் தேவையான விதத்தில் கை கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது அடிக்கடி காட்டப்படும் போதைப் பொருள் கடத்தல்தான் இந்தப் படத்தின் மையக் கரு. சுற்றி வளைத்து கொடுத்திருப்பதால் துடிப்பில்லாமல் போய்விட்டது.

துடிக்கும் கரங்கள் - கொஞ்சமாய்…

 

துடிக்கும் கரங்கள் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

துடிக்கும் கரங்கள்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓