மிரள்,Miral
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் - எம் சக்திவேல்
இசை - எஸ் என் பிரசாத்
நடிப்பு - பரத், வாணி போஜன்
வெளியான தேதி - 11 நவம்பர் 2022
நேரம் - 1 மணி நேரம் 55 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

படம் வெளியாவதற்கு முன்பு அதன் போஸ்டர்கள், டிரைலர் ஆகியவை இது ஒரு 'பேய்' படம் என நம்மை எதிர்பார்க்க வைத்தன. ஆனால், பேய்ப் படமல்ல, என பொய் சொல்லி நம்ப வைத்து ஏமாற்றியிருக்கும் ஒரு படம். ஏனென்றால் படத்திலேயே கதைப்படி நம்மை அப்படித்தான் ஏமாற்றி இருக்கிறார்கள்.

கதை என்று பார்த்தால் ஒரு வரியில் சொல்லி விடலாம். ஆனால், அந்தக் கதைக்கான திரைக்கதையை புதிய யுத்தியில் யோசித்திருக்கிறார் இயக்குனர். அது வித்தியாசமாகவும் உள்ளது, அதே சமயம் ஏமாற்றமாகவும் உள்ளது. கதையின் முக்கியக் கருவில் அழுத்தமான ஒரு சென்டிமென்ட் இருந்தாலும் அது பற்றிய சஸ்பென்ஸ் உடையும் போது அது நம்மை பாதிக்காத அளவுக்கு இருப்பதுதான் காரணம். இருந்தாலும் மாறுபட்ட படத்தை திரைக்கதை மூலமாகக் கொடுக்க மயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

பரத், வாணி போஜன் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். வாணி அடிக்கடி பயந்து மனதளவில் பாதிப்படைந்து இருக்கிறார். அதனால், அவரது சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வ பூஜை செய்யலாம் எனச் செல்கிறார்கள். பூஜை முடிந்த பின் திடீரென ஒரு இரவு நேரத்தில் கிளம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் காரில் கிளம்பும் பரத், வாணி போஜன், அவர்களது மகன் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாய் மர்மமான ஆட்களால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள். வாணியும், மகனும் அந்த இருட்டில் காணாமல் போக அவர்களைத் தேடுகிறார் பரத். அதன்பின் என்ன நடந்துது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்திற்கான சஸ்பென்சை திரைக்கதையில் நிறையவே காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்சில் நடக்கும் திருப்பங்கள் எதிர்பாராத அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், அதெல்லாம் எதற்காக என்பது திடீரென அந்தக் காலப் பழி வாங்கல் படத்தைப் பார்ப்பது போல ஏமாற்றத்தைத் தருகிறது.

மனைவி, மகன் என அழகாகப் போய்க் கொண்டிருக்கும் காதல் திருமண வாழ்க்கையில் திடீரென பிரச்சினைக்கு ஆளாகிறார் பரத். குடும்பத்துடன் மனைவி வாணி ஊருக்குச் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் மர்மமான நிகழ்வுகள் அதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்புகள் என பதட்டமும், பரிதவிப்புமாக யதார்த்தமாய் நடித்திருக்கிறார். ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என அவருக்கும் குழப்பம், நமக்கும் குழப்பம். அந்தக் குழப்பம்தான் படத்துடன் நம்மை ஒன்ற வைக்க முடியாமல் செய்து விடுகிறது.

மனதளவில் பாதிக்கப்பட்டவராக வாணி போஜன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டிற்கு கணவர், மகனுடன் செல்கிறார். அங்கு கணவரும், அப்பாவும் பகையை மறந்து சேர்வதை நினைத்து மகிழ்கிறார். அடுத்து நடு வழியில் மாட்டிக் கொண்டு தவிப்பதில் இவரும் பதற வைக்கிறார்.

கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் வாணியின் பெற்றோர்களாக நடித்திருக்கிறார்கள். பரத்தின் நண்பராக ராஜ்குமார். இவர்தான் படத்தின் வில்லன். அது என்ன என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.

இரவு நேரக் காட்சிகள் அதிகம். அதற்காக லைட்டிங்குகள், பயமுறுத்தும் கோணம் என உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா. எஸ்என் பிரசாத் பின்னணி இசை திடீர் திடீரென பயமுறுத்துகிறது.

ஒரே இடத்தில் வெறும் சில பல பயமுறுத்தல்களுடன் மட்டும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. அது பல பேய்ப் படங்களில் பார்த்த காட்சிகள் என்பதால் நம்மாள் மிரளாமல் பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸ் மட்டும்தான் படத்தில் எதிர்பார்க்காத திருப்புமுனையாக அமைந்துள்ளது. திரைக்கதைக்கு யோசித்த இயக்குனர், புதிய காட்சிகளையும் யோசித்திருக்கலாம்.

மிரள் - கொஞ்சமாய்…

 

மிரள் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மிரள்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓