ஆன்டி இண்டியன்,Anti Indian
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மூன் பிக்சர்ஸ்
இயக்கம் - இளமாறன்
இசை - இளமாறன்
நடிப்பு - இளமாறன், ஆடுகளம் நரேன், ராதாரவி
வெளியான தேதி - 10 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி, காமெடி இல்லாமல் ஒரு படம் வருகிறதென்பது அபூர்வமான ஒரு விஷயம். அப்படியான ஒரு விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது இந்த ஆன்டி இண்டியன்.

திரைப்படங்களைக் கண்டபடி விமர்சனம் செய்பவர் என்று பெயரெடுத்தவர் ப்ளூசட்டை மாறன் என்கிற இளமாறன். சினிமாவை அதிகம் விமர்சிப்பவர்கள் படங்களை இயக்க முன் வர மாட்டார்கள். ஆனால், இளமாறன் தன் படத்திற்கு வரப் போகும் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் சொல்ல வரும் கருத்து என்னவோ நல்ல கருத்துதான். ஆனால், அதை சாதாரண உருவாக்கத்துடன் மட்டுமே சொல்லியிருப்பதுதான் படத்தின் பெரும் குறை.

விளம்பரங்களை வரையும் ஓவியரான பாட்ஷா யாராலோ கொலை செய்யப்பட்டு இறந்து போகிறார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு நடக்கிறது. பாட்ஷா ஒரு முஸ்லிம் என்பதாலும், அவரது அப்பா ஒரு முஸ்லிம் என்பதாலும் முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்கின்றனர். ஆனால், அங்கு முஸ்லிம் மக்கள் அவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால், அவரது உடலை இந்துமத முறைப்படி அடக்கம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இடுகாடு சென்றால் அவர் இந்து அல்ல முஸ்லிம், அதனால் அடக்கம் செய்ய முடியாது என சொல்லிவிடுகிறார்கள். பாட்ஷாவின் அம்மா, இந்துவாக இருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர் என்பதால் கிறிஸ்துவர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய முன் வருகின்றனர். இதனால், குழப்பமான சூழல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை ஒரு அரசியல் சர்ச்சையுடன் தீர்த்து வைக்கப்படுகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் கதாநாயகன் என்று யாரும் கிடையாது, கதாநாயகி என்றும் யாரும் கிடையாது. இறந்து போன பாட்ஷா உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வருபவர்களும், அந்த உடலை வைத்து அரசியல் செய்பவர்களும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒவ்வொருவருக்குமே சரியான முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பாட்ஷாவின் தாய் மாமன், அவர் சார்ந்த இந்து கட்சியின் தலைவர், பாட்ஷாவின் சித்தப்பா, அவர் சார்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள், பாட்ஷவின் அம்மா, அவர் சார்ந்த கிறிஸ்துவ மதத் தலைவர்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் அந்த உடலை வைத்து தங்கள் மதத்திற்காக அரசியல் செய்கிறார்கள்.

இவர்கள் தவிர இந்த பிணத்தை வைத்து அரசியல் செய்யும் ஆளும் கட்சி முதல்வர் ராதாரவி, அவருக்கு ஆலோசனை சொல்லும் உதவி கமிஷனர் ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டர் வழக்கு எண் முத்துராமன் என மற்றொரு பக்கம் இடைத் தேர்தல் அரசியல் நடக்கிறது.

மதமும், அரசியலும் இந்த மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் இயக்குனர். சில சாதாரண மனிதர்களை வைத்து கேள்விகளையும் கேட்க வைத்திருக்கிறார்.

படத்தில் சரளமான கெட்ட வார்த்தைகள் அடிக்கடி வந்து போகின்றன. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் அனுமதித்ததே இல்லை.

படத்தின் மைனஸே மேக்கிங் தான். ஒரு சினிமா போன்ற உருவாக்கம் இல்லாமல் யூ-டியூபிற்காக எடுத்தது போன்ற ஒரு உருவாக்கமே தெரிகிறது.

ஆன்டி இண்டியன் - கருத்து கந்தசாமி

 

ஆன்டி இண்டியன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஆன்டி இண்டியன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓