0

விமர்சனம்

Advertisement

விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி, அருள்தாஸ், ஆனந்த்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கதாநாயகன்.

ஒரு படம் ஹிட் ஆனால் அதனை பின் தொடர்ந்தே படங்களாக எடுத்துக் குவிக்கும் தமிழ் சினிமாவில் இப்போதைய காமெடி கலர்புல் ட்ரெண்டுக்கு இந்த வார கோட்டா 'கதாநாயகன்'. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் தந்த தெம்பில் அதே பாணியில் களம் இறங்கியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

வம்புதும்புக்கு போகாமல் சண்டையை பார்த்து பயந்தோடும் ஒருவன் எப்படி குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு தன்னை இழிவாக பேசிய வருங்கால மாமனார் முன்பு கதாநாயகன் ஆகிறான் என்பதே கதை.

விஷ்ணு விஷாலுக்கு காமெடியனை பிரச்னைகளில் மாட்டிவிட்டுவிட்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொள்ளும் வழக்கமான ஹீரோ கேரக்டர் தான். வே.வ.வெ பட அனுபவத்தால் தம்பிதுரை கேரக்டருக்கு இயல்பாக பொருந்திப் போகிறார். ஒரிஜினல் மாமனாரையே அந்த மாமனார் கேரக்டருக்கு நடிக்க வைத்தது சிறப்பு.

படத்தின் கலர்புல்லுக்கும் கவர்ச்சிக்கும் கேத்ரீன் தெரசா, ரசிக்க வைக்கிறார்.

சூரி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முடிந்த வரைக்கும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். க்ளைமாக்ஸில் மட்டும் அவர்களது முயற்சி கொஞ்சம் பலிக்கிறது. மற்ற இடங்களில் பல் இளிக்கிறது.

இரண்டு பாடல்களில் ஷான் ரோல்டன் இமானாக அவதாரம் எடுத்திருக்கிறார். கேமரா, எடிட்டிங்லாம் மோசமான திரைக்கதையால் திணறுகின்றன.

நன்றாக தொடங்கி போராக பயணிக்கும் திரைக்கதையில் ஆங்காங்கே காமெடி, விஜய்சேதுபதி, மொட்டை ராஜேந்திரன் கச்சேரி, கலர்புல் பாடல்கள் என நிரப்பி வைத்து ஓட்டைகளை அடைக்க முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் முருகானந்தம். பி, சி செண்டர் ரசிகர்களுக்கு ஒருவேளை பிடிக்கலாம்.

கதாநாயகன் - கடைசியில் கதாநாயகனா என்ற சந்தேகம் தான் வருகிறது.

 

கதாநாயகன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கதாநாயகன்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓