Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஒரு மெக்ஸிகன் அபராதா (மலையாளம்)

ஒரு மெக்ஸிகன் அபராதா (மலையாளம்),oru mexican aparatha
  • ஒரு மெக்ஸிகன் அபராதா (மலையாளம்)
மலையாள இயக்குநர் டாம் எம்மட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது.
10 மார், 2017 - 14:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஒரு மெக்ஸிகன் அபராதா (மலையாளம்)

நடிகர்கள் : டொவினோ தாமஸ், நீரஜ் மாதவ், ரூபேஷ் பீதாம்பரம், காயத்ரி சுரேஷ், ஹரீஷ் பெராடி, சுதீர் காரமணா, கலாபவன் சாஜன் மற்றும் பலர்

இசை : மணிகண்டன் அய்யப்பன்

ஒளிப்பதிவு : பிரகாஷ் வேலாயுதன்

கதை, டைரக்சன் : டாம் எம்மட்டி

1970-களில் இரு இயக்கங்களாக பிரிந்து கிடக்கும் கல்லூரி மாணவர்களின் அதிகார சண்டை தான் இந்தப்படத்தின் கதைக்களம், கரு எல்லாம்.

கேரளாவில் புகழ்பெற்ற மகராஜா கல்லூரியில் எஸ்.எப்.ஒய்(SFY) இயக்கத்தின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி எமர்ஜென்சி களத்தில் அநியாயமாக அதிகார அரசியலுக்கு பலியாகிறார் கொச்சனியன் (டொவினோ தாமஸ்). அதற்கடுத்த 25 வருடங்களாக இன்னொரு இயக்கமான கே.எஸ்.க்யூ (KSQ) தான் அதிகாரத்தில் இருந்து வருகிறது. அவர்கள் அதிகாரம் எதேச்சதிகாரமாகவும் மாணவர்களின் உரிமையை நசுக்குவதாகவும் இருப்பதால் மீண்டும் எஸ்.எப்.ஒய்(SFY)யை கல்லூரியில் அதிகார மையமாக கொண்டு வரவேண்டும் என முனைப்பு கட்டுகிறார் மாணவர் நீரஜ் மாதவ்.

நீரஜின் நண்பனான பால் வர்கீஸ் (இதுவும் டொவினோ தாமஸ் தான்) கல்லூரியில் காயத்ரி சுரேஷ் என்கிற மாணவியை காதலித்து, அதில் தோற்றுப்போய் விரக்தியில் இருந்த நிலையில் அவரை எஸ்.எப்.ஒய்(SFY) இயக்கத்தில் இழுத்துவிட்டு முன்னிலைப்படுத்துகிறார் நீரஜ் மாதவ். ஆனால் கே.எஸ்.க்யூ (KSQ) மாணவர் தலைவரான ரூபேஷ் பீதாம்பரன் இவர்களை ஆரம்பத்தில் இருந்து அடக்கியாள நினைத்து அவ்வப்போது வன்முறை மூலம் மிரட்டுகிறார். இந்த சமயத்தில் கல்லூரி மாணவர் தேர்தல் வர ரூபேஷுக்கு எதிராக களத்தில் குதிக்கிறார் டொவினோ தாமஸ். ஆனால் அரசியலுக்கே உண்டான யுக்திகளையும் சூழ்ச்சிகளையும் வன்முறைகளையும் இந்த மாணவர் தேர்தலில் பயன்படுத்தி வெற்றியை பறிக்க நினைக்கிறார் ரூபேஷ். யாருக்கு வெற்றி கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ்..

செல்போன் அறிமுகமாகாத எழுபதுகளின் காலகட்டத்தில் உள்ள மாணவனை அச்சு அசலாக பிரதிபலித்திருக்கிறார் டொவினோ தாமஸ். ஒவ்வொரு முறை அடக்குமுறைக்கு ஆளாகும்போதும் எங்கேயும் ஹீரோயிசம் அதிகமாக தலைதூக்கி விடாமல் இயல்பாகவே பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடுவதும் பின்னர் தைரியத்துடன் அவற்றை எதிர்கொள்வதுமாக ஒரு முழு கதாநாயகனாக இந்தப்படத்தில் பாஸ்மார்க்.. இல்லையில்லை பர்ஸ்ட் மார்க்கே வாங்கியுள்ளார் டொவினோ.. தன்னை ஒதுக்கிய காதலி, பின்னாளில் தான் மாணவர் தலைவனாக மாறப்போகும் நேரத்தில் தேடிவந்து காதலை தெரிவிக்கும்போது அவரை ஜஸ்ட் லைக் தட் தூக்கி எறிந்துவிட்டு போகிறாரே.. செம அப்ளாஸ்.

மாணவர் தலைவனாக, வில்லன் கதாபாத்திரத்தில் படம் முழுதும் வெள்ளை வேட்டி சட்டையில் மிரட்டுகிறார் ரூபேஷ் பீதாம்பரன். முப்பது வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' படத்தில் சிறுவயது மோகன்லாலாக நடித்த இவருக்கு இதைவிட சிறப்பான ரீ என்ட்ரி கிடைக்க முடியாது.. ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான இயல்பான நடிப்பால் வில்லன் கேரக்டரையும் ரசிக்கும்படி செய்திருக்கிறார் ரூபேஷ். கதாநாயகி என பெயரளவில் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே வரும் காயத்ரி சுரேஷ் பளிச் புன்னகையால் கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகன், வில்லன் இவர்கள் இருவருக்கும் இணையான இன்னொரு முக்கிய பாத்திரத்தில்; நடித்திருக்கும் நீரஜ் மாதவ், இதுநாள் வரை பயணித்துக் கொண்டிருந்த காமெடிக்களத்தில் இருந்து சீரியஸ் மூடுக்கு மாறி, நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார். சுதீர் காரமணா, ஹரீஷ் பெராடி, கலாபவன் சாஜன் ஆகியோரும் மிக கச்சிதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தில் இரண்டு தரப்பு மாணவர் இயக்கங்களிலும் முக்கியஸ்தர்களாக இருக்கும் மாணவ கூட்டாளிகளின் இயல்பான நடிப்பே, படத்துடன் நம்மை அதிகம் ஒன்ற செய்கிறது.. எழுபதுகளின் தோற்றத்தை கண் முன் நிறுத்தியதற்காக ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதனுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.. காலத்திற்கேற்ற பின்னணி இசையால் படத்துடன் இணைந்து நம்மை பயணிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் மணிகண்டன் அய்யப்பன்.

கல்லூரி மாணவர்களின் அடிதடியை வைத்து அவ்வப்போது சில படங்கள் வந்துகொண்டிருந்தாலும், முழுக்க முழுக்க இரண்டு மாணவர் இயக்கங்களுக்கான மோதலை எழுபதுகளின் பின்னணியில் சொன்ன விஷயத்தில் தனித்து தெரிகிறார் இயக்குனர் டாம் எம்மாட்டி. மாணவர்களுக்கு இடையிலான மோதல், அதில் அரசியல் எப்படி நுழைகிறது என்பதை எந்த மிகைப்பாடும் இல்லாமல் சொல்லியிருப்பதில் தான் இந்தப்படத்தின் வெற்றியும் சாத்தியமாகி இருக்கிறது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in