Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

இளமி

இளமி,Ilami
ரவிமரியாவின் உதவியாளர் ஜூலியன் பிரகாஷ் இயக்கும் படம் இது.
27 செப், 2016 - 11:08 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » இளமி

தமிழர்களின் கலாச்சார குறியீடாகவும், வீரத்தின் அடையாளமாகவும் இருப்பது ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு எப்படி உருவானது என்பது பற்றிய வரலாற்று படத்தை எடுத்து வருகிறார்கள். 1700ம் ஆண்டுகளில் நடந்த கதையாக இது உருவாக்கப்படுகிறது. இளமி என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் சாட்டை யுவன், அனு கிருஷ்ணா நடிக்கிறார்கள், கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ரவிமரியா, தவசி, வெள்ளைப்பாண்டித் தேவர், பரளி நாகராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எம்.யுகா ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ரவிமரியாவின் உதவியாளர் ஜூலியன் பிரகாஷ் இயக்குகிறார்.


"அந்த காலத்தில் வீரத்தின் வெளிப்பாடாக ஜல்லிக்கட்டை விளையாடுவார்கள் . அதுவும் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு தான் முதன்மையான விளையாட்டு. ஜல்லிக்கட்டை தான் உலகறிந்த வீரமாக கருதுவார்கள். 1700 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த உண்மைக் கதையை மையப்படுத்தி “ இளமி “ தயாராகிறது. எதையும் தியாகம் செய்து ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவது வழக்கம். ஏன் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற போர் குணம் உள்ள இளைஞர்களை பற்றிய கதை இது.


மின் கம்பங்கள், செல்போன் டவர் போன்றவற்றை தவிர்ப்பதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்து படப் பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தோம். இளமி, இளமை ததும்பும் காதல் கதையாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகிறது. படப்பிடிப்பு தேனிமாவட்டத்தில் குரங்கணி, தலக்கோணத்தில் “நரபைலு“ என்ற இடத்திலும் இரண்டு ஊர் அரங்குகளை அமைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். மறைக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை மீண்டும் திரையில் புதுப்பிக்கிறோம்" என்றார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in