Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

யானை மேல் குதிரை சவாரி

யானை மேல் குதிரை சவாரி,yanai mela kuthirai savaari
 • யானை மேல் குதிரை சவாரி
 • இயக்குனர்:
21 ஆக, 2016 - 11:43 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » யானை மேல் குதிரை சவாரி

யானை மேல் குதிரை சவாரி - விமர்சனம

ரேகா கணேஷ் ,ஆர் .எஸ் .பிரேமலதா என இரு பெண்மணிகளை தயாரிப்பில் மட்டும் இணைத்துக் கொண்டு கருப்பையா முருகன் எனும் புதியவர் எழுத்து , பாடல்கள் , தயாரிப்பு , இயக்கம் இவற்றோடு அறிமுக நாயகி அர்ச்சனா சிங்கின் முறைப்பையனாக கெஸ்ட் ரோல் அப்பீயரன்ஸும் கொடுத்திருக்கும் படம் தான் யானை மேல் குதிரை சவாரி.

நெசவுத் தறி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளம் பெண்ணான நாயகி அர்ச்சனா சிங்கை , பல்வேறு வகையிலும் அடையத் துடிக்கிறார் அதன் முதலாளி வழக்கு எண் முத்துராமன். அவரை மாதிரியே பக்கத்து தறிக்கம்பெனி முதலாளிகளான நான் கடவுள் ராஜேந்திரன் , லொள்ளு சபாசுவாமிநாதன் , இருவரும் கூட அம்மணி அர்ச்சனா மீது காமமையல் கொண்டு அலைகின்றனர். பெற்றோரை இழந்து தம்பியுடன் தவிக்கும் , வசிக்கும் இளம் பெண் அர்ச்சனா சிங்கின் திருமணத்திற்கு உதவுவது போல் மணமகனுக்கே உலை வைத்து ,பெரும் உபத்திரம் தந்து ., தன் வயதை மறந்து தானே மணமகனாகவும் பார்க்கிறார் அந்த ஏரியா ஐஸ் வியாபாரியான மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி. அந்தஉண்மை தெரிந்ததனால் கிருஷ்ணமூர்த்தியை தீர்த்து கட்டி விட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போகிறான் இளம் பெண்ணின் தம்பி .அது சமயம் அந்த இளம் பெண்ணுக்கு கூட்டு களவாணிமுதலாளிமார்களால் நிகழும் கொடூரம் தான் யானை மேல் குதிரை சவாரி படத்தின் கரு , கதை , களம் , காட்சிப்படுத்தல் எல்லாம்.

இப்படி ஒரு அழகான கருவை , கதையை எத்தனைக்கு எத்தனை ஆபாசமாகத்தர முடியுமோ அத்தனைக்கு அத்தனை ஆபாசமாக காண்போர் முகம் சுழிக்கும் படி சதந்திருக்கிறார் இயக்குனர்

கருப்பைய்யா முருகன்.

படத்தில் இளம் பெண்ணாக இடம்பெறும் அர்ச்சனா சிங் , நான் கடவுள் ராஜேந்திரன் , வழக்கு எண் முத்துராமன், மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி ,சுவாமிநாதன் , மிப்பு , தாரிகா உள்ளிட்ட எல்லோரும் இயக்குனர் எதிர்பார்ப்பிற்கு மேலாகவே நடித்திருக்கிறார்கள். அது பலமா ? பலவீனமா .? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும் .

படத் தொகுப்பாளர் சி.கணேஷ்குமாரின் கத்திரி இப்பட எடிட்டிங் வேலையின் போது காணாமல் போய்விட்டது போல் தெரிகிறது! பாவம் , அது வேலை செய்திருந்தால் படமே காணாமல் போயிருக்கும் என அதை அவர் ,காணாது அடித்திருப்பார் போலும் . எஸ் .மோகனின் ஒளிப்பதிவு சபாஷ் சொல்லும் அளவிற்கு இல்லை. மற்றபடி ., இசைஞர்தாஜ்நூரின் இசை பெரிய விசையாக இல்லாவிடினும் படத்திற்கு ஒரளவு வலு சேர்த்திருப்பது ஆறுதல் . .

காமெடி எனும் பெயரில் காம நெடியாக படம் நெடுக டபுள் மீனிங் வசனங்கள் பரவி விரவிக் கிடப்பது அபத்தம். மேலும் ., அபலைப் பெண்ணின் வாழ்க்கை அவலங்களை பதிவு செய்கிறேன் பேர்வழி ... என திரைக்கதையிலும் , காட்சிப்படுத்தலிலும் எக்கச்சக்கமாய் தடுமாறி ரசிகனை ஏகத்துக்கும் அலைகழித்து ஆத்திரப்பட வைக்கிறார் இயக்குனர் கருப்பைய்யா முருகன். அவர் நினைத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.

இவை எல்லாவற்றுக் டும் மேல் .,இப்படக் க்ளைமாக்ஸ் ., - மூன்று பெரிய மனிதர்களால் .,பூனை மேல் சவாரியாக முடிவது கொடூரம்!

ஆக மொத்தத்தில் "யானை மேல் குதிரை சவாரி - ஒடும் திரையரங்கிற்கு ரசிகர்கள் போனால் சரி!"
வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in