ஸ்ரீரஸ்து சுபமஸ்து- திரைவிமர்சனம்
நாயகன் - அல்லு ஸ்ரீஷ்
நாயகி - லாவண்யா திரிபாதி
இயக்குனர் - பரசுராம்
டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகனும் அல்லு அர்ஜூனின் தம்பியுமான அல்லு ஸ்ரீஷின் திரைஉலக வாழ்க்கையில் முக்கியமான கால கட்டத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ஸ்ரீரஸ்து சுபமஸ்து. எந்தளவிற்கு அல்லு ஸ்ரீஷ் ஸ்கோர் செய்திருக்கின்றார் என்று பார்ப்போம்.
நாயகன் அல்லு ஸ்ரீஷ் (ஸ்ரீஷ்) பொருளாதார நிலையிலும் அந்தஸ்திலும் நல்ல நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவன். இவனது அண்ணன் தனது தந்தையின் எண்ணத்திற்கு மாறாக ஒரு நடுத்தர வர்க்கத்து பெண்ணை மணம் முடித்ததால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இப்படியாக சூழ்நிலை இருக்க அல்லு ஸ்ரீஷ் தானும் ஒரு பெண்னை (அனு) காதலுப்பதாக அவளும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவள் என்பதையும் தனது தந்தையான பிரகாஷ்ராஜிடம் சொல்கிறான்.
அவரும் தனது மகனை அழைத்து புத்திமதி சொல்கிறார். இருந்தும் பிடிவாத காரணான ஸ்ரீஷ் தனது குடும்பத்தின் பெயரயையோ அடையாளத்தையோ பயன்படுத்தாமல் காதலை கைகூட செய்வதாக சொல்கிறான்.அனுவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கையில் எல்லாம் நல்லதாகவே நடக்கிறது. அந்த நேரம் பார்த்து அனுவின் தந்தை அவளது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். இதில் ஸ்ரீஷ் எப்படி தனது காதலியை கைப்பிடித்தான் என்பதே மீதிக்கதை.
என்ன தான் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், அதனை திரைக்கதை மொழியில் காட்டியவிதத்தில் தன் பக்கம் ஈர்க்கிறது. அல்லு ஸ்ரீஷிற்கு நிச்சயம் இது ஒரு குறிப்பிடும் படியான படமாக இருக்கும், உணர்வுகளை கட்சிதமாக வெளிப்படுத்தி நம்மையும் காட்சியோடு ஒன்றிப்போக வைத்திருக்கின்றார் இயக்குனர். லாவண்யா திரிபதி- அனுவாக அழகாக வந்து நடிக்கவும் செய்திருக்கிறார். அத்தனை உணர்வுகளும் அழகாக வெளிப்படுத்துகிறார். இவரின் தந்தையாக ரமேஷ் ராவ் கட்சிதமாக பொருந்திப்போகிறார். பிரகாஷ் ராஜ் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
முன்னர் சொன்னது போலவே, பழக்கப்பட்ட கதைதான் படத்தின் பலவீனமும் கூட பிரகாஷ் ராஜின் கதாபாத்திரத்தை கையாள்வதில் இயக்குனர் சற்றே குழம்பிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மூத்த நடிர்களை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். தமனின் இசை காட்சிகளுக்கு பொருத்தமாக ஒலிக்கிறது. வசனங்களும் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நன்றாக இருக்கிறது. பழக்கபட்ட கதையை அருமையாக சொன்ன விசயத்தில் இயக்குனர் பரசுராமை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
இந்த மாதிரி படத்தை தான் நிச்சயம் அல்லு ஸ்ரீஷ் எதிர்பார்த்திருப்பார், அவரது எதிர்பார்ப்பு போலவே ஒரு முழு நீள பொழுது போக்கு படமாக ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கின்றார்.
ஸ்ரீரஸ்து சுபமஸ்து -ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.